வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை – பயண கட்டணம் எவ்வளவு தெரியுமா?
: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில் முதலாவதாகத் தயாராகியுள்ள பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வருகிற அக்டோபர் 11, 2026 முதல் பிரதமர் மோடியால் துவங்கிவைக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் இந்த வழித்தடத்துக்கான பயணக் கட்டண விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, செப்டம்பர் 29 : சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில் முதலாவதாகத் தயாராகியுள்ள பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்துக்கான பயணக் கட்டண விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிகள் முழுமையாக முடிந்து, பாதுகாப்பு அனுமதியும் கிடைத்து பல மாதங்கள் கடந்த பிறகும் சட்டமன்ற தேர்தல், புதிய அரசு பொறுப்பேற்பு உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை வருகிற அக்டோபர் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய்யும் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ரயில் டிக்கெட்டுக்கான கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : மயிலாடுதுறையில் கொடூரம்.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பேருந்து நடத்துனர் வெட்டி கொலை.. 4 தனிப்படைகள் அமைப்பு!




இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் இருக்கும். பூந்தமல்லியில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் குறித்து பார்க்கலாம்.
- பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை – ரூ.10
- காட்டுப்பாக்கம் வரை – ரூ.20
- போரூர் சந்திப்பு வரை – ரூ.30
- வடபழனி வரை – ரூ.40
இருப்பினும் இந்தக் கட்டண விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சேவை தொடங்கும்போது இறுதிக் கட்டணப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடபழனியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான சுமார் 14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இப்பாதையில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கடந்த 2026 பிப்ரவரி மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது.
ஆனால், அனுமதி கிடைத்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகியும் சேவை தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் புதிய அரசு பொறுப்பேற்றது என தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இந்த சேவையைத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : மழைக்காலத்தில் மிஸ் பண்ணக்கூடாத 6 இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்!
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11 தேதி , முதல் கட்டமாக 11 நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். மீதமுள்ள 6 நிலையங்கள் பின்னர் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை காரணமாக சென்னையின் டிராஃபிக் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றாடம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வேலைக்கு செல்லும் மக்களுக்கு இந்த ரயில் சேவை பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.