AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: நாளை இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் சொன்ன தகவல்

Tamil Nadu weather today : தமிழகத்தில் நீலகிரி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செப்டம்பர் 30, 2026 நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அக்டோபர் 2 வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: நாளை இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் சொன்ன தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Sep 2026 14:39 PM IST

சென்னை, செப்டம்பர் 29 : தமிழகத்தில் நீலகிரி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செப்டம்பர் 30, 2026 நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், செப்டம்பர் 29, 2026 நேற்று இரவு மியான்மர் கடற்கரை அருகே கரையைக் கடந்தது. அதே நேரத்தில், வட தமிழகத்தின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தவெக அமைச்சரவையில் மாற்றமா? அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி விளக்கம்!

இதன் காரணமாக செப்டம்பர் 30, 2026 நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம் தவிர்த்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1, 2026 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2026 அக்டோபர் 2 முதல் 5 ஆம் தேதி வரை 4 நாட்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலும் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோயம்புத்தூர் – நாகர்கோவில் இடையே 2 நாட்களுக்கு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 29, 2026 மற்றும் செப்டம்பர் 30, 2026 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை, பகலில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். செப்டம்பர் 29, 2026 இன்று அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரையும், செப்டம்பர் 30, 2026 நாளை 37 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 29, 2026 இன்றும் நாளையும் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும். அக்டோபர் 1, 2026 முதல் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us