AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட தவெக அலுவலகம்.. உண்மை நிலவரம் என்ன?.. கட்சித் தலைமை விளக்கம்!!

TVK Office Opened in West Bengal: மேற்கு வங்க மாநிலத்தில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டதாகக் காட்சிகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக்கழகம் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. தவெக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இயங்கி வருவதாகவும், பிற மாநிலங்களில் தொண்டர்கள் அவர்களாகவே அலுவலகங்களைத் திறப்பதாகவும், அங்கு இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட தவெக அலுவலகம்.. உண்மை நிலவரம் என்ன?.. கட்சித் தலைமை விளக்கம்!!
மேற்குவங்கத்தில் தவெக?
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Sep 2026 08:09 AM IST

சென்னை, செப்.29: தமிழக வெற்றித் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான தவெக கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அதன் தாக்கம் பிற மாநிலங்களுக்கும் வேக பரவி வருகிறது. அண்மைக் காலமாக கேரளாவின் சில மாவட்டங்களில் கட்சித் தொண்டர்கள் தவெக அலுவலகங்களைத் திறந்தது தொடர்பான செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த வரிசையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் தவெக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகக் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் காட்டுத்தீ போலப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து கட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட கட்சி அலுவலகம்:

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்துவான் மாவட்டத்தில் உள்ள பகுப்பூர் பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தவெக கிளை தொடங்கப்பட்ட மேடையில் கட்சியின் கொடி பறக்கவிடப்பட்டு, கட்சியின் தலைவர் முதலமைச்சர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற அந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றித் திறப்பு விழா நடத்தப்பட்டது. தொண்டர்கள் பலரும் தவெகவின் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான துண்டு அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளராகச் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளராகச் சஜய் டி மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் வைரலாகின.

தவெக தலைமை அளித்த அதிரடி விளக்கம்:

இச்செய்திகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத் தலைமை இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே கட்சி இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்சி ஆட்சி அமைத்த பிறகு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தீவிரத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து கட்சி அலுவலகங்களைத் திறந்து வருகின்றனர் என்று தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “தம்பி ஆதவ் அர்ஜூனா” விரைவில் பதவி விலக வேண்டி வரும்.. மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!

பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த உண்மை நிலை:

மேலும், மாற்று மாநிலங்களில் தவெக பெயரில் அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், கட்சியின் தலைமை சார்பாக அம்மாநிலங்களில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை என்பதைத் தவெக தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. தொண்டர்களின் அலைகடல் போன்ற ஆதரவால் பிற மாநிலங்களில் இயல்பாக அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றனவே தவிர, அதிகாரப்பூர்வக் கட்சிப் பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Follow Us