“தம்பி ஆதவ் அர்ஜூனா” விரைவில் பதவி விலக வேண்டி வரும்.. மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!
Premalatha Vijayakanth Latest Pressmeet : மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெறுவார். இதனால், பொதுப் பணித் துறை அமைச்சர் தம்பி ஆதவ் அர்ஜூனா விரைவில் பதவி பதவி விலக வேண்டிய நிலை வரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. இன்று திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றால் நான் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சவால் விட்டு பேசி இருந்தார். சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பார்த்து, மக்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர். எதற்காக இவற்றையெல்லாம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினால். உடனே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து நின்று விடுகிறார்.
யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆதவ் பதிலளிக்கிறார்
சட்டப் பேரவையில் யார் என்ன கேள்வி எழுப்பினாலும், யார் எந்த பிரச்சினை குறித்து பேசினாலும், எந்த துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் ஆதவ் அர்ஜுனா தான் பேசுகிறார். எதை கேட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் தாக்கி பேசுவார். இதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. தம்பி ஆதவ் அர்ஜுனா நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினாலும், அதற்கு பதில் கிடையாது. திராவிட முன்னேற்ற கழகம் மீது அவருக்கு என்னதான் காழ்ப்புணர்ச்சி உள்ளது என்று தெரியவில்லை.
மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/tamil-nadu/madurantakam-and-dharapuram-by-election-2094-postal-votes-have-been-cast-108441.html
ஒரு நாளைக்கு 1 லட்சம் முறை திமுக என்று சொல்வார் போல
ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை திமுக… திமுக… என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். மதுராந்தகத்தில் பிரச்சாரத்துக்கு வந்த போதும், சவால் விடுத்து விட்டு சென்றுள்ளார். மக்கள் என்பது உண்மை என்றால் மதுராந்தகம் மக்கள் துரோகத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய தேர்தலும், நேரமும் இதுவாகும். எனவே, ஆதவ் அர்ஜுனா விரைவில் பதவி விலக வேண்டிய நிலை வரும். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுவிற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
மதுராந்தகத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம்
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம். மூத்த குடி மக்களுக்கு பென்ஷன் வாங்கி தரப்படும். முதல்வர் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வரை ஒன்றிணைந்து போராடுவோம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து ஆட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!