AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. 2,094 தபால் வாக்குகள் பதிவு.. தேர்தல் அலுவலர்கள் தகவல்!

Madurantakam-Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தொகுதிகளில் மொத்தம் 1,201 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. 2,094 தபால் வாக்குகள் பதிவு.. தேர்தல் அலுவலர்கள் தகவல்!
மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Sep 2026 20:37 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் வராமல் வீடுகளில் இருந்தே வாக்களிக்கும் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வாக்காளர்கள் ஆகியோரிடம் தபால் வாக்குகள் பெறும் பணி கடந்த செப்டம்பர் 22- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்காக, மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவின் அடிப்படையில், 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 931 வாக்காளர்களை நேரில் சந்தித்தனர்.

மதுராந்தகம் தொகுதியில் 893 தபால் வாக்குகள் பதிவு

அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 893 வாக்காளர்களிடம் இருந்து வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 931 வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்த தகுதி பெற்றிருந்த நிலையில், 893 வாக்காளர்கள் மட்டுமே தபால் வாக்குகள் செலுத்திய உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 1,236 பேர் தபால் வாக்குகள் செலுத்த தகுதி பெற்றிருந்தனர்.

மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து ஆட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

தாராபுரம் தொகுதியில் 1,201 தபால் வாக்குகள் பதிவு

இதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் 1201 பேர் வீட்டில் இருந்தவாறு தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1,236 பேருக்கு 12- டி படிவம் வழங்கப்பட்டிருந்தது. இதில், 1,201 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மற்ற 35 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்யவில்லை. மேற்கண்ட இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அக்டோபர் 9- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

10 நாள்களில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

இதற்கு முன்னதாக, இரு தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தவால் வாக்குகள் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தற்போது, நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி அமைந்துள்ள 4 மாதங்களில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆட்சியை எடை போடும் தேர்தல் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம்.. எப்போது, எங்கு வழங்கப்படும்.. இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க தாய்மார்களே!

Follow Us