கோயம்புத்தூர் – நாகர்கோவில் இடையே 2 நாட்களுக்கு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
Coimbatore - Nagercoil Train Diversion | கோயம்பித்தூர் - நாகர்கோவில் இடையே ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. கரூர் ரயில் நிலையம் - மூர்த்திப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், செப்டம்பர் 29 : கோயம்புத்தூர் – நாகர்கோவில் (Coimbatore – Nagercoil) இடையே இயக்கப்படும் ரயில், இன்றும் (செப்டம்பர் 29, 2026), நாளையும் (செப்டம்பர் 30, 2026) மாற்றுப்பாதையில் இயங்க உள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில், இரண்டு நாட்களுக்கு எந்த வழியாக இயக்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தண்டவாள பராமரிப்பு – ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
இது தொடர்பாக சேலம் கோட்ட நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கரூர் ரயில் நிலையம் – மூர்த்திப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக இன்று (செப்டம்பர் 29, 2026) மற்றும் நாளை (செப்டம்பர் 30, 2026) ஆகிய இரண்டு நாட்கள் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : Tamilnadu Weather Forecast: மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்
பாலக்காடு – திருச்சி ரயில்
கேரளம் மாநிலம் பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், இன்று மற்றும் நாளை மறு நாள் அதாவது அக்டோபட் 01, 2026 அன்று கரூர் மாவட்டம், புகலூர் ரயில் நிலையத்துடன் (கொடுமுடி, கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ளது) தனது பயணத்தை முடித்துக்கொள்ளும்.
இதையும் படிங்க : “தெருக்கள், நீர்நிலைகளில் சாதிப் பெயர்கள் கூடாது!”.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு!!
பராமரிப்பு பணிகளுக்கு பிறகு சிறப்பு ரயிலாக இயக்கப்படும்
பிறகு பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், இந்த ரயில் புகலூர் முதல் திருச்சி ரயில் நிலையம் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இந்த ரயில் வழக்கமான ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்து பொதுமக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் இடையே ரயில்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.