AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் யூடியூபர் வீட்டில் 118 சவரன் கொள்ளை.. 600 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து திருடனை தட்டி தூக்கிய போலீஸ்!

YouTuber Home Heist In Nagercoil | நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் ஒருவரின் வீட்டில் சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொள்ளையடித்த குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் யூடியூபர் வீட்டில் 118 சவரன் கொள்ளை.. 600 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து திருடனை தட்டி தூக்கிய போலீஸ்!
பாதிக்கப்பட்ட பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Sep 2026 08:40 AM IST

நாகர்கோவில், செப்டம்பர் 29 : நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் வீட்டில் சுமார் 118 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண் தனது வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில், பெண் யூடியூபர் வீட்டில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண் யூடியூபர் வீட்டில் பெரிய கொள்ளை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் விநோத்குமார். தொழிலதிபரான இவருக்கு, மதுமிதா என்ற மனைவி உள்ளார். மதுமிதா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ள நிலையில், அவற்றில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தனந்து வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், ஆடைகள், பணம், நகை என அனைத்தையும் அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : “தம்பி ஆதவ் அர்ஜூனா” விரைவில் பதவி விலக வேண்டி வரும்.. மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!

சுமார் 118 சவரன் கொள்ளை போனது

மதுமிதா தனது கணவருடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கி குடியேறினார். இந்த நிலையில், செப்டம்பர் 24, 2026 அன்று மதுமிதா தனது கணவருடன் வெளியே சென்ற நிலையில், மதுமிதா வீட்டில் இருந்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குற்றவாளியை கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதாவின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு பேர் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்வதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள சுமார் 600 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அப்போதுதான் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 30 வயதான பாண்டி என்ற நபர் மதுமிதாவின் வீட்டில் கொள்ளையடித்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, மதுமிதாவின் வீடியோக்களை பார்த்து அவரது வீட்டில் கொள்ளையடித்ததாக அந்த நபர் கூறியுள்ளார். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்று பாண்டியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us