AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேலம் – சென்னை இடையே இனி தினமும் 2 விமானங்கள் – எப்போ தெரியுமா?

Chennai Salem Flight Service : சேலம் மற்றும் சென்னை இடையே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிறஅக்டோபர் 25, 2026 முதல் சேலம் - சென்னை இடையே தினமும் 2 நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சேலம் – சென்னை இடையே இனி தினமும் 2 விமானங்கள் – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Sep 2026 18:33 PM IST

சேலம், செப்டம்பர் 29 : சேலம் மற்றும் சென்னை இடையே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிறஅக்டோபர் 25, 2026 முதல் சேலம் – சென்னை இடையே தினமும் 2 நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானத்தின் அட்டவனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேலம் – சென்னை இடையே இனி தினமும் 2 விமானங்கள்

ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தற்போது நாளொன்றுக்கு ஒரு நேரடி விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த ஒரு விமானத்தின் நேரத்துக்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் இனி கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்படுவதால், பயணிகள் தங்களுக்கு வசதியான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க : குட்கா கடத்தலை தடுக்க காரின் மேல் துணிச்சல் பயணம் – காவலரை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, சென்னையில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்படும் விமானம், மதியம் 12.10 மணிக்கு சேலம் வந்தடையும். அதே விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.35 மணிக்கு சென்னை சென்றடையும்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் விமானம், மாலை 4.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு சென்னையை அடையும். இதன் மூலம் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்னையில் இருந்து சேலத்தை அடைந்துவிட முடியும்.

தமிழகத்தின் முக்கியத் தொழில் மற்றும் வர்த்தக நகரமாக சேலம் திகழ்கிறது. மாநிலத் தலைநகரான சென்னையுடன் தொழில், அரசுப் பணிகள், கல்வி, மருத்துவம் எனப் பல்வேறு காரணங்களுக்காக சேலம் பகுதி மக்கள் அடிக்கடி பயணித்து வருகின்றனர். குறிப்பாக, அடிக்கடி சென்னை சென்று வரும் தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பணி நிமித்தமாகப் பயணிப்பவர்களுக்கு இந்தக் கூடுதல் சேவை பெரிதும் உதவியாக இருக்கும்.

உதாரணமாக, சேலத்தில் இருந்து மதியம் சென்னை சென்று வேலைகளை முடித்துவிட்டு, அதே நாளில் மாலை விமானத்தில் சேலம் திரும்ப வாய்ப்புள்ளது. சென்னையில் இருந்து காலை விமானத்தில் சேலம் வந்து, வேலைகளை முடித்துவிட்டு, அதே நாள் மாலை விமானத்தில் சென்னை திரும்பலாம். இண்டிகோ நிறுவனம் ஏற்கெனவே சேலத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. தற்போது சென்னைக்கான சேவையும் அதிகரிக்கப்படுவதால், சேலம் விமான நிலையத்தின் போக்குவரத்து மேலும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : மயிலாடுதுறையில் கொடூரம்.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பேருந்து நடத்துனர் வெட்டி கொலை.. 4 தனிப்படைகள் அமைப்பு!

இது மட்டுமல்லாமல் 3 மாதங்களுக்கு பிறகு திருச்சியில் இருந்து இலங்கை நாட்டின் யாழ்பாணத்திற்கு வருகிற அக்டோபர் 1, 2026 முதல் இண்டிகோ விமானம் இயக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் சோழர் காலத்தில் இருந்து நீண்ட நெடிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை வருகிற அக்டோபர் 1, 2026 முதல் மீண்டும் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us