AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குட்கா கடத்தலை தடுக்க காரின் மேல் துணிச்சல் பயணம் – காவலரை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!

CM Vijay Praises Head Constable : கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்கத் துணிச்சலுடன் செயல்பட்டு, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் காரின் மேற்கூரையில் பயணித்த தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

குட்கா கடத்தலை தடுக்க காரின் மேல் துணிச்சல் பயணம் – காவலரை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!
முதல்வர் விஜய்
Sekaran S
Sekaran S | Updated On: 29 Sep 2026 16:42 PM IST

கோவை, செப்டம்பர் 29 : கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்கத் துணிச்சலுடன் செயல்பட்டு, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் காரின் மேற்கூரையில் பயணித்த தலைமைக் காவலர் வேல்முருகனை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டினார். கடந்த செப்டம்பர் 27, 2026 அன்று, கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் வேல்முருகன், குட்கா பொருட்களைக் கடத்திச் சென்றவர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

குட்கா கடத்தலை துணிச்சலாக தடுத்த காவலருக்கு முதல்வர் பாராட்டு

அப்போது, குட்கா பொருட்களைக் காரில் கடத்திச் சென்றவர்கள், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து, தலைமைக் காவலர் வேல்முருகன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் துணிச்சலுடன் பயணித்தார். தலைமை காவலர் மேலேயே ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருப்பதைப் பொருட்படுத்தாதக் கடத்தல்காரர்கள், காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சி, காளப்பட்டி நாலு ரோடு, சித்ரா வழியாகக் கணியூர் சுங்கச்சாவடியை நோக்கிச் சென்றனர்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நாளை இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் சொன்ன தகவல்

கணியூர் டோல்கேட்டில் அமைக்கப்பட்டிருந்த ‘அட்வான்ஸ் ஃபாஸ்ட் டேக்’ வசதியைப் பயன்படுத்தி சுங்கச்சாவடித் தடைகளை உடைத்துக் கொண்டு கார் மேலும் அதிவேகமாகப் பறந்தது. காரின் கூரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்ற தலைமை காவலர் வேல்முருகனைக் காப்பாற்றவும், கடத்தல் காரர்களைப் பிடிக்கவும் பின்னாலேயே வந்த சக வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் இக்காட்சிகளைப் பதிவு செய்தவாறே துரத்தினர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், கணியூர் காவல்துறையின் ரோந்து வாகனம் உடனடியாக காரைப் பின்தொடர்ந்தது. அதனுடன், கணியூர் அரசு ஆம்புலன்ஸ், எல்.ஜி மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியவையும், ‘சினேகம்’ ஆம்புலன்ஸ் நண்பர்கள் குழுவினரும் கைகோர்த்து, தப்பிச் சென்ற காரை விடாமல் விரட்டிச் சென்றனர்.

இதற்கிடையே, கார் அவிநாசி நோக்கிச் செல்வது குறித்து அவிநாசி காவல் நிலையத்துக்கும் உடனடியாகத் தகவல் பறந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸாரும் எதிர்த்திசையில் இருந்து காரை வழிமறிக்கத் தயாராகினர். பின்னால் துரத்தி வந்த வாகனங்களும், முன்னால் காத்திருந்த போலீஸாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், காரால் தப்பிக்க முடியவில்லை. அவிநாசியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் அருகே கார் வந்தபோது, ஆம்புலன்ஸ்களும் போலீஸ் வாகனங்களும் அதை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து நிறுத்தி மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடமை உணர்வு, துணிச்சல் மற்றும் சமயோசிதமாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகனின் வீரதீரச் செயலைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவரை நேரில் அழைத்துப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : நெல்லையை உலுக்கிய பயங்கரம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சோகம்!

மேலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்துப் பாராட்டி, அவரது துணிச்சலையும் கடமை உணர்வையும் வெகுவாகப் பாராட்டினார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலிலும் கடமையைச் சிறப்பாகச் செய்து, குட்கா கடத்தலைத் தடுக்க உதவிய தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயல் காவல்துறையினர் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Follow Us