AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேலை நிறுத்தம் வாபஸ் – தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

Private Bus Owners Withdraw Strike : தங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவை வாபஸ் பெறுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனியார் பேருந்துகள் செப்டம்பர் 30, 2026 நாளை வழக்கம் போல இயங்கும்.

வேலை நிறுத்தம் வாபஸ் – தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Sep 2026 15:35 PM IST

சென்னை, செப்டம்பர் 29 : தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 30,2026 நாளை அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவை வாபஸ் பெறுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதனால், செப்டம்பர் 30, 2026 நாளை வழக்கம்போல் தனியார் பேருந்துகள் இயங்கும்

வேலை நிறுத்தம் வாபஸ் – தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான மகளிர் வெற்றி பயணத் திட்டம் அக்டோபர் 2, 2026 முதல் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே இருந்த மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், இனி மாநகரம் மற்றும் நகரங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : “வனப்பகுதியை ஆக்கிரமிக்க யார் உரிமை தந்தது?”.. மேகமலை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்லும் பெண்கள் வசதிக்காக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் அனுமதிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் திருநர்களும் இதன் மூலம் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும்போது, தனியார் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் தொழில் நலிவடையும் நிலை ஏற்படும் என்றும், தனியார் பேருந்துகளை நம்பி வாழும் சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செப்டம்பர் 30, 2026 நேற்று செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்தார்.

மேலும்அரசுப் பேருந்துகளைப் போலவே தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அனுமதிக்கும்போது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, அரசு தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், செப்டம்பர் 30, 2026 நள்ளிரவு 12.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை 24 மணி நேரம் மாநிலம் முழுவதும் பேருந்துகளை இயக்கப் போவதில்லை என கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதில் மினி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!!

அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் மீது அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2 முதல் விரிவாக்கப்பட்ட இலவசப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Follow Us