ODI World Cup 2027: அக்டோபர் 1ல் வெளியாகும் 2027 உலகக் கோப்பை அட்டவணை.. அறிவிக்கும் ஐசிசி!
2027 Cricket World Cup Schedule: 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி 2027 நவம்பர் 21ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் 14 அணிகளில் 10 அணிகள் நாளை அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இவற்றில், 2 அணிகள் போட்டியை நடத்தும் நாடான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 உலகக் கோப்பை போட்டி (2027 ODI World Cup) அட்டவணை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் இணைந்து வருகின்ற 2026 அக்டோபர் 1ம் தேதி போட்டி அட்டவணையை அறிவிக்க இருக்கிறது. இப்போட்டியை தென்னாப்பிரிக்கா (South Africa), ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகள் நடத்தவுள்ளன. இந்த ஆண்டு 14 அணிகள் போட்டியிடவுள்ள நிலையில், போட்டி வடிவமும் திருத்தப்பட்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்பனைக்குக் கிடைக்காது என்றாலும், ரசிகர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை குறித்து கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தொடர் அடுத்த ஆண்டு அதாவது 2027 அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




ALSO READ: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!
எப்போது முடிவடையும்..?
🚨 ICC 2027 WORLD CUP SCHEDULE WILL BE RELEASED ON 1ST OCTOBER. 🚨 pic.twitter.com/IcC263ra8U
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 28, 2026
2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி 2027 நவம்பர் 21ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் 14 அணிகளில் 10 அணிகள் நாளை அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இவற்றில், 2 அணிகள் போட்டியை நடத்தும் நாடான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகும். மீதமுள்ள 8 அணிகள் ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசையின் அடிப்படையில் தகுதி பெறும். மீதமுள்ள 4 அணிகள் தகுதிச் சுற்றுகள் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதிபெற இருக்கிறது. மேலும், அவை தகுதிச் சுற்று 1, 2, 3 மற்றும் 4 என அட்டவணையில் பட்டியலிடப்படும். போட்டியை நடத்தும் நாடான நமீபியாவின் தகுதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: அரையிறுதியில் இந்தியா vs இலங்கை, வங்கதேசம் vs பாகிஸ்தான்.. முழு அட்டவணை!
இதுவரை எந்தெந்த அணிகள் தகுதி..?
தற்போது, தரவரிசையில் இடம்பிடிக்கப் போட்டியிடும் அணிகளில் இந்தியா (முதலிடம்), நியூசிலாந்து (2ம் இடம்), பாகிஸ்தான் (4ம் இடம்), ஆஸ்திரேலியா (5ம் இடம்), இங்கிலாந்து (6ம் இடம்), இலங்கை (7ம் இடம்), ஆப்கானிஸ்தான் (8ம் இடம்) மற்றும் வங்கதேசம் (9ம் இடம்) ஆகியவை அடங்கும். 3ம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா ஏற்கனவே போட்டியை நடத்தும் நாடாகத் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதால், வங்கதேசம் 9வது இடத்தைப் பிடித்தாலும் கூட ஒரு இடத்தைப் பெற முடியும். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியானது தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் இத்தொடருக்குத் தகுதி பெற வேண்டும்.