Asian Games 2026: அரையிறுதியில் இந்தியா vs இலங்கை, வங்கதேசம் vs பாகிஸ்தான்.. முழு அட்டவணை!
Asian Games 2026 Cricket Semi Final Schedule: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 1ம் தேதி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கும். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி அதே நாளில் இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்குத் தொடங்கும்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (2026 Asian Games) கிரிக்கெட் போட்டியானது, இதுவரை தரவரிசைகளின் அடிப்படையில் மட்டுமே முன்னேறி வந்துள்ளது. இந்தியா (Indian Mens Cricket Team), பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால், இந்த நான்கு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. ஹாங்காங், ஆப்கானிஸ்தான், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழுச் சுற்றைக் கடந்து காலிறுதிக்கு முன்னேறியது. இருப்பினும், இந்த 4 அணிகளாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்த தரவரிசை முறையின் கீழ் நேரடி காலிறுதி இடங்களைப் பெற்ற அதே நான்கு அணிகள் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட மீதமுள்ள அணிகள் தங்களது அரையிறுதிப் போட்டிகளை எங்கே, எப்போது விளையாடும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ: கனமழையால் IND – AFG மோதிய காலிறுதி போட்டி ரத்து.. அரையிறுதியில் இந்தியா!!
முழு அரையிறுதி அட்டவணை
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2 அரையிறுதிப் போட்டிகளும் வருகின்ற 2026 அக்டோபர் 1ம் தேதி நடைபெறும். முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கும் இடையே நடைபெறும்.




- முதல் அரையிறுதிப் போட்டி – பாகிஸ்தான் vs வங்கதேசம் – 1 அக்டோபர் 2026
- 2வது அரையிறுதிப் போட்டி – இந்தியா vs இலங்கை – 1 அக்டோபர் 2026
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 1ம் தேதி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கும். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி அதே நாளில் இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்குத் தொடங்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட்டின் குழுச் சுற்றுக்குப் பிறகு பல போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. அதில், எதிர்பாராத விதமாக 4 காலிறுதிப் போட்டிகளும் மழையின் காரணமாக கைவிடப்பட்டபோது, விதிகள் குறித்து கேள்விகள் எழத் தொடங்கின. காலிறுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தங்களின் உயர்ந்த தரவரிசையின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறின. 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்களின் உயர்ந்த தரவரிசையின் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது? இதுவரை மொத்த லிஸ்ட்
இந்த முறை மாற்றப்பட்ட விதிகள்..
2022-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதால், இந்திய அணி அதன் உயர்ந்த தரவரிசையின் அடிப்படையில் சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.