AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசிய விளையாட்டு: சீனாவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் வில்வித்தை அணி

India beat China Archery final : ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. வில்வித்தையில் மகளிர் கலப்பு அணிப் பிரிவு இறுதிப் போட்டியில், சீனாவை 238 - 234 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டு:  சீனாவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் வில்வித்தை அணி
தங்கம் வென்ற இந்திய மகளிர் வில்வித்தை அணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Sep 2026 10:15 AM IST

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. வில்வித்தையில் மகளிர் கலப்பு அணிப் பிரிவு இறுதிப் போட்டியில், சீனாவை 238 – 234 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மேலும், 12 ஆண்டுகளாக நீடித்து வந்த உலக சாதனையையும் இந்திய வீராங்கனைகள் சமன் செய்து அசத்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொடரில் வில்வித்தையில் இந்தியா வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.

சீனாவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் வில்வித்தை அணி

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மகளிர் கலப்பு அணிப் பிரிவில் இந்தியா ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து இந்த முறையும் இந்திய அணி வென்று பட்டத்தைத் தக்கவைக்க வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஜோதி, சிகிதா, பிரித்திகா ஆகிய மூவர் அணி முழுமையாக நிறைவேற்றியது. நகோயா வில்வித்தை அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சீன அணியின் சவாலை இந்திய வீராங்கனைகள் எளிதாக முறியடித்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தல்

மேலும் வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தென் கொரிய ஜோடியை இந்தியாவின் சிகிதா மற்றும் சாஹில் ஜாதவ் ஜோடி எதிர்கொண்டது. ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் இருவரும் தலா 10 புள்ளிகள் பெற்றனர். தென் கொரிய வீரர்கள் 10 மற்றும் 9 புள்ளிகள் மட்டுமே பெற்றதால், இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இடம்பெறும் வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவுக்கும் இந்திய ஜோடி தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிக்க : Asian Games 2026: இந்தியா – இலங்கை இடையிலான அரையிறுதி எப்போது..? எங்கு பார்க்கலாம்..?

இந்திய அணி எடுத்த 238 புள்ளிகள் பெறும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மகளிர் காம்பவுண்ட் அணிப் பிரிவில் 238 புள்ளிகள் என்ற உலக சாதனை இதுவரை தென் கொரியாவிடம் இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரிய மகளிர் அணி இந்தச் சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக எந்த அணியாலும் அந்த எண்ணிக்கையைத் தொட முடியவில்லை. இப்போது நகோயாவில், சீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 238 புள்ளிகளைக் குவித்து, அந்த உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.

சீனாவின் அனுபவமின்மையைப் பயன்படுத்திய இந்தியா

ஆசிய விளையாட்டில் மகளிர் காம்பவுண்ட் அணிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சீன அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் இந்தப் பிரிவில் சீனா ஒரு வெண்கலப் பதக்கம் கூட வென்றதில்லை. பெரிய மேடையில் சீனாவுக்கு இருந்த இந்த அனுபவக் குறைவை இந்திய வீராங்கனைகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, வெற்றியை உறுதி செய்தனர்.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் – வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்

இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. அரையிறுதி சுற்றில், இந்தப் பிரிவின் பலம் வாய்ந்த அணியான தென் கொரியாவை 235 – 233 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. மேலும், சீன அணி அரையிறுதியில் சீன தைபே அணியைத் தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது. வில்வித்தையில் முதல் தங்கம் கிடைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் நடைபெறும் தனிநபர் மற்றும் கலப்புப் பிரிவுகளிலும் இந்திய வில்வித்தை வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us