AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்… வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!

Trisha Krishnans instagram post went viral | நடிகை த்ரிஷா கிருஷ்ணா படங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வரும் அதே வேலையில் அவரது சொந்த வாழ்க்கை மற்றும் அவர் குறித்து மற்றவர்கள் பேசுவது என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்… வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!
த்ரிஷா கிருஷ்ணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 16:07 PM IST

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் சுமார் 24 ஆண்டுகளாக நாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தமிழக ரசிகர்களிடையே எவர்கிரீன் நாயகியாக வலம் வருகிறார். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இவருடன் போட்டி நாயகிகலாக வலம் வந்த பலர் தற்போது சினிமா துறையிலேயே இல்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக தனது நாயகி என்ற பதவியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வரும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் த்ரிஷாவின் நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் வெளியானது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் கருப்பு படம் வெளியாகி இருந்த நிலையில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. ஒரு பக்கம் அவரது சினிமா தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மற்றொரு பக்கம் த்ரிஷா குறித்து மற்றவர்கள் கிளப்பும் வதந்திகளும் வைரலாகி வருகின்றது.

Also Read… 4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு

இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்… வைரலாகும் த்ரிஷா பதிவு:

தொடர்ந்து சமீபத்தில் த்ரிஷா குறித்து உதயநிதியின் சர்ச்சை கருத்து பெரும் சலசப்பை ஏற்படுத்தி வைரலான நிலையில் பலரும் பலவிதமாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று இந்த வயதில் இத்தகைய நாடகங்கள் சங்கடமானவை… போய் பணம் சம்பாதித்து நிம்மதியைத் தேடுங்கள் என்று தெரிவித்து இருந்தார். மற்றொன்று, ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிப் பிரார்த்தித்த ஒரு வாழ்க்கையால் நெகிழ்ந்து போவது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று தெரிவித்து இருந்தார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரியோ ராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபன் என்டர்டெயின்மென்ட் படம்… வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர் – வைரலாகும் வீடியோ

Follow Us