AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்… ரசிகருக்கு கியூட்டாக பதிலளித்த த்ரிஷா கிருஷ்ணன்

Trisha Krishnan X Post Viral On Social Media: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பில் அடுத்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்… ரசிகருக்கு கியூட்டாக பதிலளித்த த்ரிஷா கிருஷ்ணன்
த்ரிஷா கிருஷ்ணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 May 2026 15:53 PM IST

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமா முழுவதும் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாகவே வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து இருந்தார். இதில் மலையாள சினிமாவில் ஒரு படமும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து இருந்தார். இதில் இரண்டு படங்களில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் ஒரு படத்தில் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடித்து இருந்தார். இந்தப் படங்கள் அனைத்தும் த்ரிஷாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் முதலாவதாக கருப்பு படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். இவர்களின் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது அவரது ரசிகர்கலிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கருப்பு படம் குறித்து த்ரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்:

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திர வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோவைப் பகிர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் ஒரு ரசிகர் த்ரிஷா இந்தப் படத்தில் நடித்து இருப்பதே மறந்துவிட்டது என்று தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி; நானும் மறந்துவிட்டேன். குறைந்தபட்சம் இப்போதாவது அவர்கள் ஒரு நினைவூட்டலை அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Kara Movie: கர படத்தின் இசைக்கு கிடைத்த வரவேற்பு.. நன்றி தெரிவித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு!

த்ரிஷா க்ருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கர முதல் ராஜா சிவாஜி வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் எந்த படத்தை தியேட்டரில் பார்ப்பீங்க?

Follow Us