AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது

Moondram Pirai Movie Digitally Remastered For OTT Release: தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மூன்றாம் பிறை படத்தை மறு சீரமைப்பு செய்து தற்போது ஓடிடியில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது
மூன்றாம் பிறைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Apr 2026 16:02 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 19-ம் தேதி பிப்ரவரி மாதம் 1982-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மூன்றாம் பிறை. இயக்குநர் பாலு மகேந்திரா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தை அவரது ஃபிலிமோகிராஃபியில் கல்ட் படம் என்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். மேலும் இந்தப் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீதேவி,
ஒய்.ஜி.மகேந்திரன், சில்க் ஸ்மிதா, காந்திமதி, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.ஆர்.வீரராகவன், ஜே.வி. ரமண மூர்த்தி, கே.நட்ராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனைப் படத்தது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசைமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இளையராஜா இசையில் ஏசுதாஸ் குரலில் வெளியான கண்ணே கலைமானே பாடல் தற்போது உள்ள இளைஞர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது:

சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த மூன்றாம் பிறை படம் தற்போது மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைக்கப்பட்ட படத்தை நாளை 1-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிட உள்ளது. இது தொடர்பாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… TN 2026 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

மூன்றாம் பிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

Follow Us