AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TN 2026 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

TN 2026 Movie OTT Update : தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியகி சர்சையை ஏற்படுத்திய படம் TN 2026. இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN 2026 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
T2N 2026 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Apr 2026 19:50 PM IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராக வலம் வருகிறார் உமாபதி ராமையா. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக உள்ள தம்பி ராமையாவின் மகன் தான் உமாபதி ராமையா. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நாயகனாகவே நடித்து வந்தார். படங்களில் இவர் நாயகனாக நடித்து பிரபலம் ஆனதைவிட சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே அதிக அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படங்களில் நாயகனாக நடிப்பதை விட தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் வெளியனா படம் TN 2026. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தில் நடிகர் நட்டி நடராஜன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, தலைவாசல் விஜய், சித்ரா லட்சுமணன், ஆண்ட்ரூஸ், ஜாவா சுந்தரேசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, ஸ்ரீஜா ரவி, தேவி மகேஷ், இந்திரஜா சங்கர், வையாபுரி, ஆதியா கதிர், முத்துக்குமரன், லொள்ளு சபா மாறன், சி.ரங்கநாதன் மற்றும் சாண்டி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியகும் TN 2026 படம்:

இந்த TN 2026  படம் பொலிட்டிகள் சட்டையர் பாணியில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் தற்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை மையகாம வைத்து வெளியாகி இருந்தது. படத்தைப் பார்த்தவர்கள் பல விமசனங்களை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் நாளை 30-ம் தேதி ஏப்ரல் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… விக்ரம் படத்தின் கதை ரோலக்ஸ் கதாபாத்திரத்திலிருந்து தொடங்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது – இயக்குனர் ரத்னகுமார்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் யாஷ்

Follow Us