AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் யாஷ்

Actor Yash Statement About Toxic Movie: கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் யாஷ் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Apr 2026 11:47 AM IST

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது தயாராகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படம் முன்னதாகவே வெளியாக இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டை சில காரணங்களுக்காக ஒத்திவைப்பதாக தெரிவித்து இருந்தனர். மேலும் இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்தின் திரைக்கதையில் நடிகர் யாஷ் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ள இந்தப் படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகி இருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சோகமான செய்தியை நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

சில கதைகளுக்குப் பொறுமை தேவை. சில பயணங்களுக்கு அது அவசியமாகிறது:

அதன்படி நடிகர் யாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது, நாம் உருவாக்கும் படங்கள் இருக்கின்றன, ஆனால் சினிமா மீது நாம் ஏன் காதல் கொண்டோம் என்பதை நமக்கு நினைவூட்டும் படங்களும் இருக்கின்றன. ‘டாக்ஸிக்’ அத்தகைய ஒரு பயணமாகவே அமைந்தது. சினிமா கான் மாநாட்டில் எங்கள் படத்தை வெளியிட்டதும், உலகளவில் கிடைத்த அமோகமான வரவேற்பைக் கண்டதும், நாங்கள் எப்போதும் நம்பிய ஒரு விஷயத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது – அதாவது, இந்தப் படம் உலகளவில் அதன் முழுமையான ஆற்றலை அடையத் தகுதியானது.

‘டாக்ஸிக்’ படம் தயாராகிவிட்டது, நாங்கள் தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் காரணமாக, எங்கள் வெளியீட்டு கால அட்டவணையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். முன்னதாக அறிவித்தபடி ஜூன் 4 அன்று படம் வெளியாகாது என்றாலும், பின்னர் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தேதியில் வெளியிடப்படும். ‘டாக்ஸிக்’ விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளுக்கு வரும்.

இந்திய சினிமா தனது குரலைக் கண்டறிந்து, மிகுந்த நம்பிக்கையுடன் உலக அரங்கில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், தரத்தை உயர்த்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஒரு நடிகர் – தயாரிப்பாளராக, இந்தியத் திரைப்படத் துறைக்கும், நம் அனைவருக்கும் எனது பங்களிப்பைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணத்தை நான் பார்க்கிறேன். நமது படம் உலகை அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்துடன் சென்றடைவதை உறுதிசெய்ய நேரம் ஒதுக்குவதன் மூலம் இதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்கள் ஆதரவு என்னுடன் நிலைத்திருக்கிறது, அதை நான் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் போற்றுகிறேன்.

சில கதைகளுக்குப் பொறுமை தேவை. சில பயணங்களுக்கு அது அவசியமாகிறது. நீங்கள் ரசித்துக் கொண்டாடக்கூடிய ஒரு திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவோம் என உறுதியளிக்கிறோம் – இந்தியத் திரையுலகிற்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகத் திகழும் ஒரு திரைப்படம்.

Also Read… காஜல் அகர்வாலின் தி இந்தியன் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

நடிகர் யாஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திலிருந்து இன்று மாலை வெளியாகும் கருப்பா கூட வா பாடல்… வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

Follow Us