AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிசி படத்தின் மீது வைத்த நம்பிக்கை… கலாநிதி மாறனை சந்தித்து நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj Thanks Producer Kalanithi Maran: இயக்குநராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகராக அறிமுகமாகியுள்ள புது படம் டிசி. இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டுவரும் நிலையில், தயாரிப்பாளர் கலாநிதிமாறனை சந்தித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளனர்.

டிசி படத்தின் மீது வைத்த நம்பிக்கை… கலாநிதி மாறனை சந்தித்து நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!
அருண் மாதேஸ்வரன், கலாநிதிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Aug 2026 21:20 PM IST

கோலிவுட் சினிமாவில் தனது ஒரே படத்தின் மூலம் மக்கள் மனதில் இயக்குநராக பிரம்மாண்ட இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த நிலையில், இதையடுத்து கார்த்தியின் கைதி (Kaithi) படத்தை இயக்கி மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் முதல்வர் விஜய் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த விதத்தில் இயக்குநராக இருந்த இவர், டிசி (DC) என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்கத்தில் உருவான இப்படம், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது.

இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறனை சந்தித்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்கள். அது தொடர்பான பதிவை லோகேஷ் தனது எக்ஸ் பதிவு பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- வைரலாகும் தகவல்!

தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவின் நடிகர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளித்து, எல்லா வழிகளிலும் எங்களுடன் உறுதுணையாக நின்ற கலநிதிமாறன் சார் மற்றும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் எப்போது ஒரு சிறப்பான படமாக இருக்கும்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் மாபெரும் நடிகர்கள்.. அட இவர்களா?

திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெரும் டிசி திரைப்படம்:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் தயாரித்தபடம் டிசி. இதில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் நடிகைகளால் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், ஒவ்வொரு காட்சிகளிலும் இவரின் இசை திரையரங்குகளில் தெறித்தது என கூறலாம். அந்த அளவிற்கு அனிருத்தின் இசை இப்படத்தில் ஒரு பெரிய தூணாகவே இருக்கிறது. இப்படம் தற்போது திரையரங்குகளில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us