AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் தவறுதலாக 5 மணி நேரம் நடந்த போலீஸ் சோதனை”.. மதுரையில் பரபரப்பு!!

Police Conduct wrong house search: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் குவாரி விதிமீறல் தொடர்பான சோதனையின் போது, ஆனந்தகுமார் என்பவரது வீட்டிற்குப் பதிலாகத் தவறுதலாக திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் வந்த பிறகே வீடு மாறியது தெரியவந்த நிலையில், திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் தவறுதலாக 5 மணி நேரம் நடந்த போலீஸ் சோதனை”.. மதுரையில் பரபரப்பு!!
போலீஸ் சோதனை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Nov 2026 08:49 AM IST

மதுரை, நவ.21: மதுரை மாவட்டத்தில் குவாரி விதிமீறல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தியுடன் தொடர்புடைய இடங்களில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், அலங்காநல்லூர் பகுதியில் வீடு மாறிச் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாரி விதிமீறல் விவகாரம் தொடர்பாக அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தச் சம்மனுடன் சென்ற போலீசார், தவறுதலாக அதே வீதியில் நான்கு வீடுகள் தள்ளி அமைந்துள்ள திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீட்டிற்குக் காலை 6 மணிக்கே சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். திடீரென வீட்டிற்குள் நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் அங்கு வந்த பிறகே வீடு மாறிச் சோதனை நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்

கிராம நிர்வாக அலுவலர் இல்லாதது குறித்து கேள்வி:

வீடு மாறிச் சோதனை நடத்தப்பட்ட விவரம் தெரியவந்ததும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனை நடத்தப்பட்ட போது உள்ளூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) உடன் இல்லாதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். தவறான வீட்டில் சோதனை நடத்திவிட்டு ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு, இதுதான் அவர்களது சொத்து எனக் கூறினால் என்ன செய்ய முடியும் என்றும், சோதனை நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் திமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர்.

5 மணி நேர சோதனைக்கு பின் புறப்பட்ட போலீசார்:

தவறுதலான வீட்டில் சோதனை நடைபெற்ற போதிலும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் சோதனைக்கு இடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரம் வரை சோதனை நடத்திய பிறகு போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சோதனை நடைபெற்ற காலத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றமான சூழல் நிலவியது.

இதையும் படிக்க: ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!

அரசின் தவறுகளை மறைக்க சோதனை:

சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுகவினர், அரசின் தவறுகளை மறைப்பதற்காகவே திமுகவினரைக் குறிவைத்துச் சோதனை நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினர். ஆனந்தகுமார் வீட்டில் சோதனை நடத்துவதாகச் சம்மன் வழங்கிவிட்டு, ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனை நடத்தியதைத் தாங்கள் எதிர்த்ததாகவும், எந்த ஒரு ஆவணமும் இன்றி, என்ன நோக்கத்திற்காகச் சோதனை நடைபெறுகிறது என்றே தெரியாமல் யாரோ ஒருவரின் உத்தரவின் பெயரில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Follow Us