Viral Video : நியூயார்க் வீதியை ஸ்தம்பிக்க வைத்த இந்திய ஜோடியின் திருமண வரவேற்பு!
Indian Couple Welcome In Newyork | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய ஜோடியின் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். பெரும்பாலும் இந்த வீடியோக்கள் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பானதாக இருக்கும். அந்த வகையில், நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய ஜோடியின் வரவேற்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
நியூயார்க்கில் இந்திய ஜோடியின் பிரம்மாண்ட ஊர்வலம்
இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. தங்களது திருமணம் மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்வர். சிலருக்கு வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்வது பிடித்த தேர்வாக இருக்கும். இந்திய திருமணங்களில் கொண்டாட்டங்களுக்கு தடையே இருக்காது. மேல தாளம் என கலைக்கட்டும். இந்தியாவில் மட்டுமன்றி எங்கு நடைபெற்றாலும் இந்திய திருமணங்கள் கொண்டாட்டங்கள் மிகுந்தவையாக இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக தான் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : 73 வயதில் பாராகிளைடிங் செய்து அசத்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நியூயார்க்கில் உள்ள 5த் அவன்யூவில் இந்திய ஜோடியின் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. மணமக்கள் திருமண வரவேற்பில் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் அந்த தெரு முழுவதும் நின்றுக்கொண்டு உற்சாகமாக நடனமாடுகின்றனர். மணமக்கள் மைக்கில் பாடல் பாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இந்திய நகரங்களில் பாதுகாப்பு.. மதிப்பெண் வழங்கிய ரஷ்ய பெண்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அதற்கு ஆதரவாகவும், பலர் எதிர்ப்பாகவும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.