AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : மருத்துவரின் கை உரையை விடாமல் பிடித்துக்கொண்ட பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

New Born Tightly Holds The Gloves of Doctor | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவரின் கை உரையை பிடித்துக்கொண்டு விடாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : மருத்துவரின் கை உரையை விடாமல் பிடித்துக்கொண்ட பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Apr 2026 19:46 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். மிகவும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறும். அந்த வகையில் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் கை உரையை பிடித்துக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மருத்துவரின் கை உரையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குழந்தை

குழந்தைகளே ஒரு அதிசயம் தான், அப்படி இருக்க அந்த குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும் இருக்கும். இவ்வாறு குழந்தைகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவரின் கை உரையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் காவலாளி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில்  வைரலாகி வரும் அந்த வீடியோவில், மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்து ஒரு குழந்தையை பிறக்க வைத்துள்ளார். குழந்தைகள் பிறந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய சோதனைகளை மருத்துவர் மேற்கொள்கிறார். அப்போது அந்த குழந்தை மருத்துவரின் கை உரையை மிக இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது. அந்த மருத்துவர் எவ்வளவு முயற்சி செய்து அந்த குழந்தை கை உரை மீதான தனது பிடியை விடாமல் உள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : மும்பை ஆட்டோவில் டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பைபர் பாடல்கள்.. இணையத்தை கலக்குக் ஆட்டோ ஓட்டுநர்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us