AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : மும்பை ஆட்டோவில் டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பைபர் பாடல்கள்.. இணையத்தை கலக்குக் ஆட்டோ ஓட்டுநர்!

Mumbai Auto Driver Playlist Video Goes Viral | சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மும்பை ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவில் சர்வதேச பாடகர்களின் பாடல் ஓடிக்கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மும்பை ஆட்டோவில் டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பைபர் பாடல்கள்.. இணையத்தை கலக்குக் ஆட்டோ ஓட்டுநர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Apr 2026 15:01 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வித்தியாசமான வீடியோக்கள் உலகில் உள்ள சில சுவாரஸ்யமான மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரியப்படுத்தும். அந்த வகையில் சர்வதேச பாடகர்களின் பாடல்களை ஆட்டோவில் பாட வைத்துக்கொண்டு பயணிகளுடன் சவாரி செய்யும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டோ ஓட்டுநரின் கனவும்,  காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சர்வதே பாடல்கள் உடன் மும்பையில் ஆட்டோ ஓட்டும் நபர்

ஆட்டோவில் பயணம் செய்வது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பொது போக்குவரத்துகளில் பயணம் செய்யும் சவால்கள் இல்லை. எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அங்கு சரியாக சென்று இறங்கலாம். எந்தவித அலைச்சல்களும் இல்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்டோவில் பயணம் செய்யும்போது பாடல்களை கேட்டுக்கொண்டே பயணம் செய்யலாம். பொதுவாக ஆட்டோக்களில் ஆட்டோ ஓட்டுநர் யாரின் ரசிகராக இருக்கிறாரோ அவரது பாடல்கள் அல்லது அவருக்கு பிடித்த பாடல்கள் தான் ஓடும். அது பெரும்பாலும் அந்த ஓட்டுநர் எந்த பகுதியை சார்த்தவராக இருக்கிறாரோ அந்த மொழி பாடல்களாக இருக்கும். ஆனால், மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சர்வதே பாடல்களை கேட்டுக்கொண்டே ஆட்டோ ஓட்டுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : 30 நொடிகளில் பலரை கடித்து குதறிய நாய்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Nammya Bhasin (@nammyabhasin)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்கிறார். அவர் பயணம் செய்யும் அந்த ஆட்டோவில் சர்வதேச இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் ஆங்கில பாடல்கள் ஓடுகிறது. அப்போது புகழ்பெற்ற பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் பிளாங்க் ஸ்பேஸ் பாடல் ஓடுகிறது. அந்த பாடலை இளம் பெண் பாட, ஆட்டோ ஓட்டுநரும் உடன் இணைந்து பாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நள்ளிரவு 3 மணிக்கு பெண்ணுக்கு நடந்த 2 சம்பவங்கள்.. வைரல் வீடியோ!

அந்த ஆட்டோ ஓட்டுநர் தனக்கு ஜேபி மோர்கனில் பணியாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us