Viral Video : புலியை சுற்றி வளைத்த ஜீப்கள்.. வைரல் வீடியோவுக்கு இணையத்தில் குவியும் கண்டனங்கள்!
Tiger Surrounded By Jeeps In Ranthambore | சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரத்தம்போர் வனவிலங்கு பூங்காவில், புலி ஒன்றை ஜீப்கள் சுற்றி வளைத்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சில குற்ற சம்வங்கள் மற்றும் விலங்குகள், மனிதர்களுக்கு எதிரான செயல்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறும். அந்த வகையில், ரத்தம்போரில் ஒரு புலியை ஏராளமான ஜீப்கள் சுற்றி வளைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
புலியை சுற்றி வளைத்த ஜீப்கள் – வைரல் வீடியோ
வன உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும். அங்கு வரும் பொதுமக்கள் விலங்குகளை பார்வையிடுவர். இது விலங்குகளுக்கு எதிரானது என்றும், அவற்றின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை என்று பல தரப்பில் இருந்து தொடர் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் சில பகுதிகளில் திறந்தவெளி பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. அதாவது, விலங்குகள் தங்களது இயல்பை போலவே வெளியில் சுற்றித் திரியும் நிலையில்,மனிதர்கள் அவற்றை வாகனங்கள் மூலம் சென்று பார்வையிடுவர். அத்தகைய விலங்குகள் பூங்கா ஒன்றில் ஒரு புலியை சில ஜீப்கள் சுற்றி வளைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த ஆசிரியர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ரத்தம்போர் விலங்குகள் பூங்காவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதாவது அந்த பூங்காவில், புலி ஒன்று வெளியே சுற்றித் திரிகிறது. அதனை சில ஜீப்கள் சுற்றி வளைத்தபடி நின்றுக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பணி முடிந்து வீடு திரும்பும் தந்தையை உற்சாக நடனமாடி வரவேற்ற மகன்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், விலங்குகளை தொந்தரவு செய்வது கண்டிக்கப்படி வேண்டியது என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.