AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பணி முடிந்து வீடு திரும்பும் தந்தையை உற்சாக நடனமாடி வரவேற்ற மகன்.. வைரல் வீடியோ!

Little Boy Welcomes His Father From Work By Dancing | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சிறுவன் ஒருவன் வேலை முடிந்து வீடு திரும்பும் தனது தந்தையை நடனமாடி வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது,

Viral Video : பணி முடிந்து வீடு திரும்பும் தந்தையை உற்சாக நடனமாடி வரவேற்ற மகன்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Mar 2026 22:37 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இதில் பல விதமான வீடியோக்கள் இருக்கும். நடனமாடுவது, பாட்டு பாடுவது, ஸ்டண்ட் செய்வது என பல வீடியோக்கள் அடங்கும். அந்த வகையில், சிறுவன் ஒருவர் தனது தந்தையை வரவேற்க நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

தந்தையை வரவேற்க நடனமாடிய சிறுவன்

பெரும்பாலான குடும்பங்களில், நிதி சுமை தந்தையின் மீதுதான் இருக்கும். குடும்பத்தை நிதி சிக்கல் இன்றி வழிநடத்த அவர்கள் அயராது உழைப்பர். அவ்வாறு குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்த தந்தைகள் தினமும் வேலைக்கு சென்று மிகுந்த களைப்புடன் வீடு திரும்புவர். இந்த நிலையில், அவர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க கூடிய இடமாக வீடு இருக்கும். அவ்வாறு, பணி முடிந்து வீடு திரும்பும் தந்தையை அவரது மகன் நடனமாடி வரவேற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தந்தை ஒருவர் பணி முடிந்து வீடு திரும்புகிறார். அவர் கதவை திறக்கும்போது அவரது மகன் நடனமாடுகிறார். அதனை அந்த தந்தை அமைதியாக பார்த்துக்கொண்டே தனது தோள் பையை கழட்டி வைக்கிறார். ஒருவேளை தந்தைக்கு தனது நடனம் பிடிக்கவில்லையோ என அந்த சிறுவன் ஆடுவதை நிறுத்திகிறார். உடனே சிறுவனை அழைக்கும் அவரது தந்தை தானும் நடனமாட தொடங்குகிறார். உடனே மகிழ்ச்சி அடையும் அந்த சிறுவன், தந்தையுடன் இணைந்து நடனமாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து ஓட்டிச் சென்ற பெண்.. ஷாக் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், தந்தை மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் அந்த பாச பந்தம் குறித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us