AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

Group of Men Stealing In Jewellery Shop | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கொள்ளை கும்பல் ஒன்று நகை கடை ஒன்றில் கொள்ளை அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Mar 2026 23:02 PM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் அந்த பல வீடியோக்கள் குற்ற சம்பவங்களை கண்டறியும் வகையில் இருக்கும். அந்த வகையில், அமெரிக்காவில் கொள்ளை கும்பல் ஒன்று நகை கடையில் கொள்ளை அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

நகை கடையில் புகுந்து கொள்ளை அடித்த கும்பல்

வீடுகள், தெருக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஏதேனும் தவறு நடந்துவிடாமல் தவிர்க்கவும், ஒருவேளை தவறு நடத்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த சிசிடிவி காட்சிகள் காரணமாக இருக்கும். அந்த வகையில், கொள்ளை கும்பல் ஒன்று அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள நகை கடையில் கொள்ளை அடிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நகை கடை ஒன்றில் நுழையும் கும்பல் ஒன்று, அந்த கடையை முழுவதுமாக சூறையாடுகிறது. அங்கிருக்கும் கண்ணாடிகளை உடைத்து அதனுள் இருக்கும் நகைகளை அவர்கள் சூறையாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பைக்கில் விளையாடிக்கொண்டே பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us