Viral Video : பைக்கில் விளையாடிக்கொண்டே பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள்.. வைரல் வீடியோ!
Children Playing In The Rear Seat While Father Riding Bike | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில், சிறுவர்கள் இருவர் தங்களது தந்தையில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து விளையாடிக்கொண்டே பள்ளிக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் சில மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும், சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது பிள்ளைகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
விளையாடிக்கொண்டே தந்தையுடன் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்
தந்தை ஒருவர் தனது பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு தந்தை தனது பிள்ளைகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என தோன்றலாம். தனது பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என அந்த தந்தை அவர்களை விளையாடிக்கொண்டே பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். இதன் காரணமாக தான், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பூசாரியை தலைகீழாக தூக்கி வீசிய யானை.. அதிர்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தனதை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். அந்த சிறுவர்கள் மற்ற பிள்ளைகளை போல சோகமாக பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக செல்கின்றனர். அதாவது அந்த இரண்டு சிறுவர்களில் சிறுமி ஒருவர் தனது தந்தையின் தோல் மீது சாய்ந்துக்கொண்டு, எதிரில் இருக்கும் சிறுவனுடன் விளையாடிக்கொண்டே செல்கிறார். இதுதான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : முட்டையில் இருந்து வெளியே வந்த பிளாஸ்டிக்.. இளம் பெண் வெளியிட்ட ஷாக் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.