Viral Video : முட்டையில் இருந்து வெளியே வந்த பிளாஸ்டிக்.. இளம் பெண் வெளியிட்ட ஷாக் வீடியோ!
Plastics Coming Out of Egg | இணையத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், முட்டையில் இருந்து பிளாஸ்டிக் வெளியேறியதாக பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் உதவியால் உலகின் எந்த மூலையில் அசாதாரன மற்றும் குற்ற செயல்கள் நடைபெற்றாலும் அது குறித்து மிக விரைவில் உலகிற்கு தெரிய வந்துவிடும். சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தனிநபர்கள் பலரும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர். அந்த வகையில், பெண் ஒருவர் ஆன்லைனில் முட்டை ஆர்டர் செய்த தனக்கு பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
செப்டோவில் பிளாஸ்டிக் முட்டை – பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
உலகம் முன்னேற முன்னேற உணவுகளில் கலப்படம் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் இயற்கை உணவுகளை சாப்பிட்டு வந்த காலம் மாறி, செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு வருகின்றனர். இதேபோல சந்தையில் போலியான மற்றும் பிளாஸ்டிக் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றனர். பிளாடிக் அரிசி, காய்கறிகள், முட்டை என பிளாஸ்டிக்கில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் பெண் ஒருவர பிளாஸ்டிக் முட்டை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஒரு பாத்திரத்தில் முட்டையை வேக வைத்துள்ளார். அப்போது அந்த முட்டை உடைந்து அதில் இருந்து ஏதோ ஒன்று வெளியாகி அது அப்படியே ரப்பர் போல மாறியுள்ளது. மஞ்சள் நிற ரப்பர் துண்டுகளை போல அவை தோன்றுகின்றனர். இது குறித்து அந்த வீடியோவில் கூறியுள்ள பெண், இதுவரை பிளாஸ்டிக் முட்டைகள் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முதல் முறையாக இப்போதுதான் நேரில் பாரிக்கிறேன் இன்று கூறுகிறார்.
இதையும் படிங்க : Viral Video : இந்திய ரயிலில் சிறப்பான உணவு.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவுக்கு கீழ் உணவு பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.