AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார் பரிசு! மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!

Watch Video: பரிசைப் பெற்றுக்கொள்ள வந்த சிறுவனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டு வந்து சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினர். புதிய காருக்குப் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து குடும்பத்தினர் வழிபாடும் நடத்தினர்.

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார் பரிசு! மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!
6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Oct 2026 19:48 PM IST

அக்டோபர் 28, 2026: வெறும் ரூ.200 செலவில் வாங்கிய அதிர்ஷ்டக் கூப்பன் மூலம், ரூ.50 லட்சம் மதிப்பிலான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை 6 வயது சிறுவன் பரிசாக வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம், சீலாம்புரா பகுதியைச் சேர்ந்தவர் மேதன்ஷ் ரைக்வார். அபாபுரியில் உள்ள ஸ்ரீ சர்கார் தாம் பகுதியில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலில் இவருக்கு முதல் பரிசாக டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கிடைத்துள்ளது.

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்!


சுமார் ஓராண்டுக்கு முன்பு, அபாபுரி தாமில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் மேதன்ஷின் பாட்டி கிரண் ரைக்வார் கலந்துகொண்டார். அப்போது, ரூ.200 கொடுத்து அதிர்ஷ்டக் குலுக்கல் கூப்பன் வாங்கிய அவர், அதில் தனது பேரனின் பெயரைப் பதிவு செய்துள்ளார்.

2026ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குலுக்கல் முடிவில் மேதன்ஷின் பெயர் முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த குடும்பத்தினருக்கு இந்தப் பரிசு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – அகவிலைப்படியில் 3% உயர்வு

மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு!

பரிசைப் பெற்றுக்கொள்ள வந்த சிறுவனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டு வந்து சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினர். புதிய காருக்குப் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து குடும்பத்தினர் வழிபாடும் நடத்தினர்.

சமூக வலைதளங்களில் வைரல்!

வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான கார் கிடைத்த செய்தி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பலரும் சிறுவனின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: எத்தனால் அளவை அதிகரிக்கும் திட்டம் இல்லை.. மத்திய அரசு விளக்கம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரகக் கார் ஆகும். வலுவான கட்டமைப்பு, ஆஃப்-ரோடு பயணத்துக்கு ஏற்ற வசதிகள் மற்றும் பிரீமியம் உட்புற வடிவமைப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். மாடலைப் பொறுத்து பெட்ரோல், டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன.

Follow Us