AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எத்தனால் அளவை அதிகரிக்கும் திட்டம் இல்லை.. மத்திய அரசு விளக்கம்!

No Ethanol Blend Increase Beyond 20 Percentage | இந்தியாவில் தற்போது எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எத்தனால் அளவை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

எத்தனால் அளவை அதிகரிக்கும் திட்டம் இல்லை.. மத்திய அரசு விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Oct 2026 09:20 AM IST

கோவா, அக்டோபர் 28 : பெட்ரோலில் (Petrol) எத்தனால் (Ethanol) அளவை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு (Central Government Of India) தெரிவித்துள்ளது. ஈரான் போர் காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய நிலையில், அரசு எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை (E20 Petrol) அறிமுகம் செய்தது. இது தொடர்பாக தொடர் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அரசு இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. இந்த நிலையில், இ20 பெட்ரோல் குறித்து மத்திய அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எத்தனால் அளவை அதிகரிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

கோவாவில் நடந்த மாநாடு ஒன்றில் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் இ20 பெட்ரோல் குறித்த முக்கிய தகவல்களை கூறினார். அதாவது, பெட்ரோலில் எத்தனால் கலக்கு அளவை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!

ரூ.1.6 லட்சம் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது

இந்த இ20 பெட்ரோல் மூலம் நாட்டுக்கு சுமார் ரூ.1.6 லட்சம் கோடி அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1.4 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ளது என்று கூறியுள்ளார். எத்தனால் பெட்ரோலால் வானகங்கள் பழுது அடைவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை. எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்கு ஏற்றது. 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்கள் பழுதாகின்றன.

இதையும் படிங்க : வங்க கடலில் சீறும் அர்னாப் புயல்.. பெயர் வைத்தவர் யார்? என்ன அர்த்தம்? முழு விவரம் இதோ!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாரு இந்தியாவுக்கு எந்த ஒரு அழுத்தமும் வரவில்லை. தங்களுக்கு சாதகமான மற்றும் மலிவான விலையில் எண்ணெய் வழங்கும் எந்தஒரு நாட்டிடம் இருந்தும் இந்தியா தொடர்ந்து எரிபொருள் வாங்கும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us