AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – அகவிலைப்படியில் 3% உயர்வு

Dearness Allowance Hiked : மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – அகவிலைப்படியில் 3% உயர்வு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Oct 2026 18:49 PM IST

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகவிலைப்படியில் (Dearness Allowance) 3 சதவீத உயர்வை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இந்த முடிவின்படி, ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும். இதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இந்த முடிவின்படி, ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும். இதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இதையும் படிக்க : எத்தனால் அளவை அதிகரிக்கும் திட்டம் இல்லை.. மத்திய அரசு விளக்கம்!

மாதாந்திர ஊதியம் எவ்வளவு உயரும்?

அகவிலைப்படியிலான இந்த உயர்வு, ஊழியரின் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 3 சதவீதத்திற்கு இணையான கூடுதல் தொகை அகவிலைப்படியாக வழங்கப்படும். உதாரணமாக, ரூ. 18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர், தற்போது 60 சதவீத விகிதத்தில் ரூ. 10,800-ஐ அகவிலைப்படியாகப் பெறுகிறார். புதிய விகிதமான 63 சதவீதத்தின்படி, இந்தத் தொகை ரூ. 11,340 ஆக உயரும். அதாவது மாதம் கூடுதலாக ரூ. 540 கிடைக்கும்.

அதேபோல், ரூ. 35,400 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியருக்கு மாதம் கூடுதலாக ரூ. 1,062 கிடைக்கும். ரூ. 50,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியரைப் பொறுத்தவரை, அகவிலைப்படி ரூ. 30,000லிருந்து ரூ. 31,500 ஆக உயரும். இதன் மூலம் மாதம் கூடுதலாக ரூ. 1,500 பலன் கிடைக்கும்.

ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!

மத்திய அரசின் இந்த முடிவு, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர்களுக்கான அகவிலை நிவாரணம், தகுதியுள்ள அடிப்படை ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் விளைவாக, அவர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள இந்த உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 10,016 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிதி நிவாரணம் வழங்குவதே இந்த முடிவின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அசாம் ஹோட்டலில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு.. ஐந்து பேர் பலி.. நடந்தது என்ன?

இது எப்போது நடைமுறைக்கு வரும்?

பொதுவாக, மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அதாவது 2026 ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இருந்து அமலுக்கு வரும் வகையில்)அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) விகிதங்களை மாற்றியமைக்கிறது. இந்த புதிய உயர்வு எந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும், நிலுவைத் தொகையை வழங்குவது குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Follow Us