தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!
Diwali Special Trains : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - நாகர்கோவில் மற்றும் சென்னை - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 28 : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை – நாகர்கோவில் மற்றும் சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் (Special Train) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்பதால் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
- தாம்பரத்தில் இருந்து 2026 நவம்பர் 6 அன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06153 தாம்பரம் -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அடுத்த நாள் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்
- மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 2026 நவம்பர் 9 அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06154 என்ற நாகர்கோவில் -தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிக்க : “தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்கு விடிவே இல்லை”.. முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!




சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில்
- சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 2026 நவம்பர் 6 இரவு 11.55 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06023 கொண்ட சென்னை சென்டிரல் -போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
- மறுமார்க்கமாக நவம்பர் 9, 2026 அன்று போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் 06024 என்ற எண் கொண்ட போத்தனூர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
முன்பதிவு
இந்த பண்டிகை கால சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 29, 2026 நாளைகாலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்கள் கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்.. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அதிரடி உத்தரவு!!
மதுரை தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து
இதற்கிடையே செயல்பாட்டுக் காரணங்களால், மதுரை – தாம்பரம் இடையேயான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 30, 2026 அன்று இரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06136 கொண்ட ரயில் மதுரை -தாம்பரம் ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செயல்பாட்டுக் காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.