AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வெதர்மேன் ஹேமசந்திரன் சொல்லும் தகவல்..’

Weather Forecast By Delta Weatherman Hemachandran: அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் வெப்பநிலை இயல்பைவிட சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என ஹேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் இறுதியில் சில இடங்களில் மழை பெய்தாலும், வெப்பநிலை அதிகரிக்கும் சூழலும் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வெதர்மேன் ஹேமசந்திரன் சொல்லும் தகவல்..’
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Oct 2026 16:19 PM IST

அக்டோபர் 28, 2026: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 28 முதல் 30 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

மற்ற நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரக்கூடிய நவம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரும்பட்சத்தில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு இடையேயான கடல் பகுதிகளில் அதன் நகர்வு அமையக்கூடும் என ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.1.20 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

இருப்பினும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எந்த அளவுக்கு வலுப்பெறும், அதன் நகர்வுப் பாதை எவ்வாறு அமையும், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பன குறித்த விவரங்கள் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளின் அடிப்படையிலேயே உறுதியாகும்.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்குமா?

இதற்கிடையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் வெப்பநிலை இயல்பைவிட சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என ஹேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் இறுதியில் சில இடங்களில் மழை பெய்தாலும், வெப்பநிலை அதிகரிக்கும் சூழலும் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் நல்ல மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us