AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி தங்கம் மீது நடக்கலாம்.. துபாயில் 24 கேரட் தங்கத்தால் உருவாகும் உலகின் முதல் தங்க நடைபாதை! திறப்பு விழா எப்போது?

உலகிலேயே முதல் முறையாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இது அமையும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது. இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் வணிகப் பிரிவு மூத்த இயக்குநர் ரஷித் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார்.

இனி தங்கம் மீது நடக்கலாம்.. துபாயில் 24 கேரட் தங்கத்தால் உருவாகும் உலகின் முதல் தங்க நடைபாதை! திறப்பு விழா எப்போது?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Oct 2026 16:51 PM IST

அக்டோபர் 28, 2026: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதையை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க துபாய் திட்டமிட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இது அமையும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது. இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் வணிகப் பிரிவு மூத்த இயக்குநர் ரஷித் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதுடன், உலகளாவிய தங்க வர்த்தக மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் துபாயின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தங்க நகைகளில் கின்னஸ் உலக சாதனை!

துபாயில் தங்கம் தொடர்பான மற்றொரு சாதனை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தத் தங்க நடைபாதை திட்டமும் கவனம் பெற்றுள்ளது. ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம் தயாரித்த பாரம்பரிய இந்திய ஜிமிக்கி காதணிகள், உலகின் மிக அதிக எடை கொண்ட தங்கக் காதணிகள் மற்றும் உலகின் மிகப்பெரிய காதணிகள் என்ற இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றுள்ளன.

இந்தச் சாதனை அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஷித் அல் ஹர்மூதி, துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டில் அமைக்கப்படவுள்ள தங்க நடைபாதை, பார்வையாளர்கள் தங்கத்தால் ஆன பாதையில் நடந்து செல்லும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் என்றால் என்ன?

துபாயின் டெய்ரா பகுதியில் அமைந்துள்ள துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட், தங்க வர்த்தகம், நகை விற்பனை மற்றும் சுற்றுலா அனுபவங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜனவரி 2026-ல் தொடங்கப்பட்டது. துபாய் மீடியா அலுவலகத்தின் தகவலின்படி, இந்தப் பகுதியில் தங்கம், நகைகள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.

Also Read: திபெத்தில் 40 நிமிட இடைவெளியில் 2 நிலநடுக்கங்கள்: 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தங்க வர்த்தக நிறுவனங்களின் வருகை அதிகரிப்பு!

துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து செயல்படத் தொடங்கிய மொத்த தங்க வர்த்தக அலுவலகங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஷித் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார். அதேபோல், தங்கம், நகைகள், விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் சொகுசுக் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யும் புதிய கடைகளின் எண்ணிக்கையும் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளின் காரணமாக, அடுத்த ஓராண்டில் இப்பகுதிக்கு இடம்பெயரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புதிய முயற்சி!

தங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய துபாய் நகரின் வர்த்தக அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடைபாதை திட்டம் பார்க்கப்படுகிறது. தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களின் விற்பனையைத் தாண்டி, தங்கத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா அனுபவத்தையும் உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

 

Follow Us