AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரான்ஸில் வெடித்த மிகப்பெரிய வன்முறை.. “Calm and Order” உத்தரவிட்ட அதிபர் மேக்ரோன்!

Immanuel Macron's Calm and Order | பிரான்ஸில் மாணவர்கள், பொதுமக்கள், இடதுசாரிகள் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் தான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் "Calm and Order" அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் வெடித்த மிகப்பெரிய வன்முறை.. “Calm and Order” உத்தரவிட்ட அதிபர் மேக்ரோன்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Oct 2026 11:58 AM IST

பாரிஸ், அக்டோபர் 19 : பிரான்ஸில் (France) அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Immanuel Macron) “Calm and Order” அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவர் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், பிரான்சில் வெடித்த மிகப்பெரிய வன்முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரான்ஸில் வெடித்த மிகப்பெரிய வன்முறை

பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லாதது, ஆசியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து செப்டம்பர் மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது முதலே அவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், பிரான்சில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பணவீக்கம், அரசின் சிக்கன கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

இதையும் படிங்க : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி

அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள்

இவ்வாறு மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் களம் கண்டு வரும் நிலையில், போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாரிஸ், மார்சோய், லில், நிஸ் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை சம்பவங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில் தான், லிமோஜெஸ் பகுதியில் உள்ள சுமார் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டடம் ஒன்று போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. மேலும், இந்த போராட்டத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தும் பலர், அங்குள்ள வணிக வளாகங்களை சூறையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை: இலங்கை அதிபர் உறுதி

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேக்ரோன், அழிவை ஏற்படுத்தியவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். கொள்ளையடித்தவர்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் அதற்கான தண்டனையை பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இதையெல்லாம் பார்க்கும்போது பிரெஞ்சு மக்கள் எப்படி இப்படி செய்ய முடியும் என நாம் அனைவரும் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கட்டமாக பேசியுள்ளார்.

Follow Us