AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியான தகவல்

Sri Lankan Tamil Death Row : சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மத ரீதியாக பதிவிட்டதற்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து  – வெளியான தகவல்
சிவராசா அனோஜன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2026 13:05 PM IST

சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சவுதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அனோஜன், இஸ்லாம் மற்றும் இறைத்தூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து

கடந்த அக்டோபர் 13, 2026 அன்று சவுதி உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்ததாக, இலங்கை வெளியுறவுத்துறை அக்டோபர் 14, 2026 இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் இலங்கையை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : தமிழ் வம்சாவளியை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – யார் இந்த நவநீதம் பிள்ளை?

கடந்த 2026 ஜூன் மாத இறுதியில் இலங்கையில் நடைபெற்ற இந்து யாத்திரையின்போது ஒருவர் நாயை உதைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அப்போது ஒரு பயனர் இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த அனோஜன், இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து தமிழில் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அனோஜன் அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அதற்குள் அவர் கமெண்ட் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டுடன் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் ஓனருக்கு புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சவுதி அரேபியா காவல்துறையினரிடம் தெரிவிக்க, கடந்த 2026 ஜூலை மாதம் சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டார். அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 2026 ஜூலை 15 அன்று, அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. ஆனால், செப்டம்பர் 17 அன்று சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, ஷரியா சட்டத்தின் கீழ் மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இலங்கை அரசு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. செப்டம்பர் 21 அன்று அனோஜனின் குடும்பத்தினர் அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். பொதுமன்னிப்பு பெறுவதற்கு அரசு எந்த முயற்சியையும் விட்டுவைக்காது என அப்போது அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் கடிதம்

இதற்கிடையே, அனோஜனுக்குக் கருணை காட்டுமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஆறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்க ள் செப்டம்பர் 24, 2026 அன்று சவுதி வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் எழுதினர்.மேலும் மதம் கடந்து தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தேடிவந்த காதல்.. ‘நோ’ சொல்ல மனசில்லை.. 21 பெண்களை மணந்த யாசகரின் விசித்திர கதை!!

மேல்முறையீடுக்காக இலங்கையிலிருந்து சிறப்புச் சட்டக் குழு ஒன்று ரியாத் சென்றது. கடந்த 0அக்டோபர் 11, 2026 அன்று சவுதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இலங்கைத் தூதரும் சட்டக் குழுவுடன் இணைந்து சவுதி அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட இரண்டே நாள்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், அனோஜனின் சிக்கல் முழுமையாகத் தீர்ந்துவிடவில்லை. சவுதியின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலில் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டுமா, அல்லது அவர் மீதான தீர்ப்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Follow Us