AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூண்டுக்குள் குதித்த நபர்.. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர்.. இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் அதிர்ச்சி!

England Zoo Tiger Killed Person : இங்கிலாந்தில் அமைந்துள்ள யார்ஷயர் மிருகக் காட்சி சாலையில் சுற்றிப் பார்க்க சென்ற ஒருவர் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்ற நிலையில், அவரை புலி ஆக்ரோஷமாக அடித்து கொன்றது. இந்த காட்சிகள் வைரலாக பரவிவருகிறது.

கூண்டுக்குள் குதித்த நபர்.. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்த உயிர்.. இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் அதிர்ச்சி!
ஒருவரை அட்டாக் செய்த புலி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Oct 2026 12:05 PM IST

இங்கிலாந்து நாட்டில் யார்ஷயர் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிருகக்காட்சி சாலையை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு நபர் திடீரென புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்துக்குள் திடீரென குதித்தார். அப்போது, அவரைப் பார்த்த அந்த புலி ஆக்ரோசத்துடன் சீறி பாய்ந்து வந்து கடித்துக் கொன்றது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட புலியை கருணை கொலை செய்ய முடியாது என்று மிருக காட்சி சாலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் காட்சிகள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் காட்சிகளின் அடர் நிற நீண்ட கை சட்டை அணிந்திருந்த நபர் புலி அடைக்கப்பட்டு இருந்த இடத்துக்குள் குதித்தார். அப்போது, புல்வெளியில் அமர்ந்து உறுமிக் கொண்டு இருந்த புலி அவரின் மீது ஆக்ரோசத்துடன் பாய்ந்து தன் விரலை நீட்டுவது பதிவாகி உள்ளது. அப்போது, அந்த நபர் தப்பிக்கும் முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து, அந்த புலி அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் தன் பாதங்களால் அவரை தாக்கியது.

மேலும் படிக்க: பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?

ஒருவரை கடித்து கொன்ற புலி

ஒரு கட்டத்தில் அந்த புலி அந்த நபரின் மீது ஏறி தோள்பட்டையை கடித்தது. இதன் பின்னர், அந்த புலி அந்த நபரை தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அவசர மருத்துவ சேவைகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் குறித்த அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மிருகக் காட்சி சாலை நிர்வாகம் விளக்கம்

மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து புலியாக இருப்பிடத்திலேயே இருந்ததாகவும், பொது மக்களுக்கு பரவலான ஆபத்து எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மிருகக்காட்சி சாலை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த புலியை கருணை கொலை செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாது என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

Follow Us