AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆர்யாவின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Arya 40 Movie Title Teaser Update | நடிகர் ஆர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஆர்யா 40 படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாக உள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு உள்ளது வைரலாகி வருகின்றது.

ஆர்யாவின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2026 12:14 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் ஆர்யா. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டாம் நாயகனாக நடித்து வந்த நிலையில் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் சாக்லேட் பாயாக தொடர்ந்து ரொமண்டிக் ட்ராமா பாணியில் உருவாகும் படங்களிலேயே நடித்து வந்தார். அந்தப் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் உருவாகும் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் உருவாகி வெளியாகி வருவது போல தென்னிந்திய மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 40வது படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆர்யாவின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது?

அதன்படி நடிகர் ஆர்யாவின் நடிப்பில் 40வதாக உருவாகும் படத்தை இயக்குநர் நிகில் முரளி எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தினை நடிகர்கள் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இருவருமே தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எல்.ஆர்.ஈஸ்வரியின் பேமஸ் பாடலை பதிவிட்டு நவராத்திரி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்

Follow Us