AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!

TVK Velmurugan Condemns Minister Rajiv : நொய்யல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள நுரைக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தான் காரணம் என்று அமைச்சர் ராஜீவ் கூறியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!
வேல்முருகன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Oct 2026 16:55 PM IST

தமிழகத்தில் நொய்யல் ஆற்றில் வரும் நுரைக்கு சோப்பு மற்றும் ஷாம்பு தான் முக்கிய காரணம் என்று தவெக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது: நொய்யல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள நுரைக்கு சோப்பு மற்றும் ஷாம்பு தான் காரணமா. பொறுப்பெற்ற முறையில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் பேசலாமா. தென்பெண்ணை மற்றும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை அதிக அளவில் காணப்படுவதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு தான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் கூறி உள்ளார். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்த ஆய்வின்படி நுரைக்கு காரணத்தை அமைச்சர் கூறினார்

தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட பதிவுகளில் தென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டுக்கு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் எந்த ஆய்வின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்படுத்திய சோப்பு மற்றும் ஷாம்பு தான் ஆற்றில் ஏற்பட்ட நுரைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சேலம் பிரபல ரவுடி கொலை.. திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது எப்படி.. கைதான 7 பேர் பகீர் வாக்குமூலம்!

கழிவு நீரின் ரசாயன கூறுகளை அரசு வெளியிடுமா

ஆற்று நீரில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தீர்ப்பாயத்தில் பதிவுகள் இருக்கும் போது, அந்த கழிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சோப்பையும், ஷாம்புவையும் மட்டும் சுட்டிக் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. நொய்யல் ஆற்றின் நுரைக்கு சோப்பு மற்றும் ஷாம்பு தான் முக்கிய காரணம் என்றால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எந்த நீர் மாதிரியான ஆய்வை செய்து இந்த முடிவுக்கு வந்தார். ஆற்றின் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீரின் ரசாயன கூறுகள் என்ன என்பதை தவெக அரசு வெளியிடுமா. சோப்பு மற்றும் ஷாம்புவே முறைக்கு காரணம் என்றால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்பாடு குறித்து அரசு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன.

அமைச்சரின் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்

நொய்யல் ஆற்று பகுதியில் பல ஆண்டுகளாக பேசப்படும் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சனைக்கு அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன விளக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக பகுதிகளில் இருந்து கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் வருவதாக என்.ஜி.டி. பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் கூறிய கருத்தை, துறை அமைச்சர் திரும்ப பெறுவதோடு, அதற்கு உரிய வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

Follow Us