பிக்பாஸில் ரூட்டு மாறும் முகேஷின் காதல்… சோகத்தில் சாதிகா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அது எந்த மொழியாக இருந்தாலும் காதல் காட்சிகள் நடைபெறாமல் இருந்தது இல்லை. அப்படி தமிழ் பிக்பாஸிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி முதன்முதலில் இந்தி மொழியில் ஒளிபரப்பாவதில் இருந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பாவது வரை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும் சீசன்களில் போட்டியாளர்களிடையே காதல் கதை என்பது நிச்சயமாக நடந்துகொண்டே உள்ளது. அதில் ஒரு சில காதல் கதைகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் காதல் தொடர்ந்ததும் உண்டு. அதில் குறிப்பிட்ட சிலர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. ஆனால் பெரும்பாலான காதல்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் முடிந்துவிடும். அல்லது வீட்டைவிட்டு வெளியே வந்த உடனே முடிந்துவிடும். இப்படி இருக்கும் சூழலில் தமிழ் சீசனிலும் அந்த காதல் கதைகள் நடைபெறாமல் இல்லை. ஆனால் இந்தப் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தான் 50 நாட்கள் ஆகியும் எதுவும் சரியாக அமையவில்லை என்று பார்வையாளர்களுக்கு தோன்றியது.
ஒரு பக்கம் சாதிகாவும் முகேஷும் தொடர்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தாலும் காதல் டால்க்ஸ் எதும் காதில் கேட்கவில்லை. மாறாக வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு அது காதலா என்ன என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில் 8-வது வாரம் வீட்டில் ஒரு புது கதை தொடங்கி உள்ளது.




பிக்பாஸில் ரூட்டு மாறும் முகேஷின் காதல்… சோகத்தில் சாதிகா:
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்கில் எதிர் எதிர் அணியில் இருக்கும் அக்ஷிதா மற்றும் முகேஷ் இருவரும் காதல் டால்க்ஸ் செய்து வருகின்றனர். இது ஜாலியாக செய்து வருகிறார்கள் என்று முதலில் தோன்றினாலும் இன்றையா எபிசோடில் அவர்களின் பேச்சைப் பார்த்துவிட்டு சாதிகா மனமுடைந்து செல்லும் வீடியோவைப் பார்க்கையில் அது நிஜமாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day52 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/ntxFwWS5Xa
— Vijay Television (@vijaytelevision) October 28, 2026
Also Read… குட் பேட் அக்லி போல டேர் டெவில் தலைப்பையும் அவரே சொன்னார்… ஆதிக் ரவிச்சந்தர்