AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அவன் உங்க கிட்ட மாட்டல டா நீங்கதான் அவன் கிட்ட மாட்டிருக்கீங்க.. மாஸ்டர் பிளான் போட்ட கவ்பாய் டீம் – வைரலாகும் ப்ரோமோ!

Bigg Boss Cowboys vs Mafia Task: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 8வது வாரமானது சிறப்பான குயிக் கண் கவ்பாய் மற்றும் மைனிங் மாஃபியா டாஸ்க்குடன் தொடங்கியுள்ளது. இந்த டாஸ்கில் முதல் போட்டிக்கு சிறப்பான பிளான் போட்ட கவ்பாய் டீம் அதை செயல்படுத்தியுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அவன் உங்க கிட்ட மாட்டல டா நீங்கதான் அவன் கிட்ட மாட்டிருக்கீங்க.. மாஸ்டர் பிளான் போட்ட கவ்பாய் டீம் – வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸ் ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2026 14:14 PM IST

தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிடிஃஎப் வாசன் நுழைந்ததும் இந்த நிகழ்ச்சி மேலும் சூடுபிடிக்க தொடங்கியடித்து என கூறலாம். அந்த விதத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கும் நிலையில், கிட்டத்தட்ட 8 வாரங்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் கடந்த வாரத்தில் ஷமா வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தமாக 15 போட்டியாளர்களே உள்ளனர். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது மிகவும் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்திலே குயிக் கன் கவ்பாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியா (Quick Gun Cowboys and Mining Mafia) இரு அணிகளாக பிரிந்து புதிய போட்டி ஒன்று நடைபெற்றுவருகிறது.

அந்த விதத்தில் இந்த முதல் டாஸ்கிலே குயிக் கன் கவ்பாய் டீம் சிறப்பான பிளான் ஒன்றை போட்ட நிலையில், அதை செயல்படுத்துவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: அது நயன்தாராவால் மட்டுமே முடியும்.. ரெஜினா பகிர்ந்த விஷயம்!

முதல் போட்டியில் வியூகம் அமைத்த குயிக் கன் கவ்பாய் டீம்:

இந்த டாஸ்கில் முதல் போட்டியாக, கவ்பாய் டீமிலிருந்து நபர் ஒருவரின் முகம் பாதிக்கப்பட்ட காயின் ஒன்றை, கேபிடேரியாவில் உள்ள இடம் ஒன்றில் மறைத்து வைக்கவேண்டும். அதை மைனிங் மாஃபியா அணியினர் கணிப்பிட்டுபிடிக்கவேண்டும். அந்த விதத்தில் டிடிஃஎப் வாசனின் மூலம் பாதிக்கப்பட்ட காயினை கவ்பாய் டீம் தெரியும் விதத்தில் மறித்து வாய்த்தது. மாஃபியா டீம் அதை எளிதில் கண்டறியும் விதத்தில் வைத்து, அவர்களை வெறுப்பேற்றி அவர்களின் மொத்த அணியையே காலிசெய்யும் விதத்தில் கவ்பாய் டீம் பிளான் போட்டிருந்தனர்.

இதையும் படிங்க: குயிக் கன் கவ்பாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்.. பிக் பாஸில் இந்த வாரத்திற்கான சிறப்பான டாஸ்க் – வைரலாகும் ப்ரோமோ!

அதன்படி, டிடிஃஎப் வாசன் முகம் பாதிக்கப்பட்ட காயினை, மாஃபியா அணியிலிருந்து வினோத் பாபு கண்டுபிடித்த நிலையில், அது குறித்து கவ்பாய் டீம் மகிழ்ச்சியில் சிரித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 51வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், போட்டியில் இன்னும் தீவிரம் அதிகரித்துள்ளது. அந்த விதத்தில், 8வது வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், குயிக் கன் கவ்பாய் மற்றும் மைனிங் மாஃபியா என இரு அணிகளாக பிரிந்து புதுவிதமான டாஸ்க் நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us