AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்

Actor Suriyas Scene Movie Censor Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் சென்சார் அப்டேட் என்ன என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2026 11:56 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை அடுத்தடுத்து கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களை மட்டும் இன்றி இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இவரது இயக்கத்தில் இந்த சீன் படம் உருவாகி உள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களாக உள்ள நடிகர்கள் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன?

இந்த நிலையில் இந்த சீன் படம் சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உள்ளது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள சீன் படம் தொடர்பான சென்சார் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… நடிகர் தனுஷ் – இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Nayanthara: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் என்ன? – அப்டேட் இதோ!

Follow Us