46 படங்கள் நடிச்சு இருக்கேன்… ஆனா சீன் படத்திற்குதான் எனக்கு பயமா இருக்குனு சூர்யா சார் சொன்னார் – இயக்குநர் ஓபன் டாக்!
Jithu Madhavan talks about Suriya | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீப காலமாக மற்ற மொழி இயக்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து படங்களை செய்து வருகிறார். அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக இணைந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள படமாக உள்ளது. அதன்படி இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் சூர்யா இருவரும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு சீன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா சீன் பட ஷூட்டிங்கிற்கு வர பயப்படுவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சீன் படத்திற்குதான் எனக்கு பயமா இருக்குனு சூர்யா சார் சொன்னார்:
இந்தத் திரைப்படத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. பல காட்சிகள் மற்றும் வசனங்கள் மாற்றப்பட்டன. ஒருநாள், சூர்யா சார் என்னிடம், நான் இதுவரை 46 படங்களில் நடித்துள்ளேன். வழக்கமாக, படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போதே, அன்று என்ன படமாக்கப்போகிறோம், என்ன வசனங்களைப் பேச வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இந்தப் படத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படுமோ என்ற பதற்றம் எனக்குள் இருந்தது என்று கூறினார். உண்மையில், படப்பிடிப்புக்குச் சற்று முன்பாகத்தான் அவரிடம் நான்கு பக்கங்கள் கொண்ட வசனங்களைக் கொடுத்தோம். அந்தத் தாள்களை வாங்கிக்கொண்ட அவர், இதோ, உடனே படித்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு, மிக விரைவாகவே அந்த வசனங்களைக் கற்றுக்கொண்டார்.
படத்தில் பல இடங்களில் மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தோம். அந்த மாற்றங்களை அடுத்தடுத்த காட்சிகளிலும் இணைக்க வேண்டியிருந்தது. இதைக் குறித்து எனக்குச் சற்று குற்ற உணர்வு இருந்தது. ஆனால், அவர் இதைப் புரிந்துகொண்டார். எங்களுடன் அமர்ந்து பலமுறை விரிவாக விவாதித்தார். ஒவ்வொரு புதிய காட்சியையும் படமாக்குவதற்கு முன்பாக, அந்தக் கதாபாத்திரத்தை அவர் எப்படி வெளிப்படுத்த வேண்டும், அந்தக் காட்சியின் மூலம் நான் எதைச் சொல்ல விரும்புகிறேன் என்பது குறித்து நாங்கள் இருவரும் பேசி, ஒரு பொதுவான புரிதலுக்கு வருவோம். இந்த முழுப் படப்பிடிப்புச் செயல்பாட்டின்போதும் எங்களிடையே அந்தப் புரிதல் இருந்தது. படத்தில் செய்யப்பட்ட அந்த மாற்றங்களைச் செய்வதில் அவர் மகிழ்ச்சியுடனேயே இருந்தார்.
Also Read… Sai Pallavi: நித்யா ரெட்டி-யாக சாய் பல்லவி… ஓம் படத்திலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Scene – In the movie, there were a lot of changes. Many sequences and dialogues were changed. One day, #Suriya sir told me, “I’ve done 46 films. I come from home to the set every day in the car, knowing what we are going to shoot and what dialogues I have to speak. I know how people will talk, but in this movie, I was having tension about what changes were going to be made.”
It’s true that we gave him 4 pages of dialogue just before the shot. He took the pages in his hand and said, “Suda Suda Vanthrku.” He learnt the dialogues very quickly.
I was feeling guilty because we were changing a lot of places in the movie, and those changes had to be incorporated into the next scene. He understood that as well. He would sit with us for discussions, and we discussed a lot. Every time we started a new scene, we would discuss it first and come to a common point, understanding of how he had to portray the character and what I wanted to convey through that scene.
That understanding was there throughout the entire process, and he was happy to make those changes in the movie.
– #JithuMadhavan https://t.co/iw2oUZiDXk— Movies Singapore (@MoviesSingapore) October 27, 2026
Also Read… அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான #Love வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ