AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்

Sai Pallavi glimpse video from OM movie update | நடிகை சாய் பல்லவி தற்போது ஓம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். இவரது கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது இயக்குநர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்
ஓம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 12:13 PM IST

மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக தனது பயனத்தை தொடங்கினார் நடிகை சாய் பல்லவி. மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார் நடிகை சாய்பல்லவி. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி மொழியிலும் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தி மொழியில் முன்னதாக ஏக் தீன் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அந்தப் படம் அந்த மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெரிய அளவில் பெறவில்லை என்றாலும் ஓடிடியில் வெளியான பிறகு மற்ற மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தியில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இன்றி தமிழ் மொழியில் தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ரசிகர்கள் ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸே வீடியோ எப்போது வெளியாகும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் இயக்குநர் அதற்கு சரியான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று 26-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு ஓம் படத்தில் இருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் வீடியோ வெளியாவதாக தெரிவித்துள்ளனர். இந்த அப்டேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… 50-வது நாளில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சீன் படம் யாரெல்லாம் பார்க்கலாம்… சூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட்

Follow Us