AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுக பிரமுகர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.. சேலத்தில் பயங்கரம்!!

Salem Real Estate Murder: சேலம் சூரமங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரும், எதிர்க்கட்சியான திமுகவின் பிரமுகருமான டேவிட் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில்வே மேம்பாலத்தில் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.. சேலத்தில் பயங்கரம்!!
கொலையான டேவிட்
Sathis S
Sathis S | Updated On: 26 Oct 2026 13:38 PM IST

சேலம், அக்.26: தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்ட-ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் பட்டப்பகலில் அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், சேலம் மாநகரப் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் பிரமுகருமான நபர் ஒருவர், மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில்வே மேம்பாலத்தில் வைத்து ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கோரச் சம்பவம் சேலம் மாநகரத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் திடீர் வன்முறையால் அப்பகுதியில் சட்ட-ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதுடன் பெரும் பதற்றமும் நிலவி வருகிறது.

இதையும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..

ஓட ஓட வெட்டிய மர்மக் கும்பல்:

சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், இன்று காலை 11 மணியளவில் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புது ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் சூரமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் கடக்க முயன்றபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரைத் திடீரென வழிமறித்துச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது. தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த டேவிட், அக்கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காகப் பாலத்திற்கு கீழே ஓடியுள்ளார். இருப்பினும் ஆத்திரமடைந்த அக்கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று, பாலத்திற்கு கீழே பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த டேவிட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாமீனில் வந்த 20 நாட்களில் நடந்த படுகொலை:

கொலை செய்யப்பட்ட டேவிட் மீது ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வழக்கு நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்ற இவர், நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கு முன்பாகத்தான் வெளியீடு பெற்றுத் திரும்பியிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த டேவிட்டின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த எதிர்தரப்பு மர்மக் கும்பல், அவர் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதைக் கணக்கிட்டு இந்தத் திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து கொலையாளிகள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் காலணிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் திரண்ட உறவினர்கள்:

கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் சூரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டேவிட்டின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட டேவிட் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த பிரமுகர் என்பதால், இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்களும் உறவினர்களும் ரயில்வே மேம்பாலத்தில் பெருமளவில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழலும் உருவானது. பட்டப்பகலில் மக்கள் கண்முன்னே அரங்கேறிய இந்தத் தொடர் வன்முறை தொடர்பாகக் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us