AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் மனதில் நினைத்த ஆசை தற்போது நிறைவேறியது – நடிகர் சூர்யா

Suriya said I silently manifested working with Jithu Madhavan | நடிகர் சூர்யா சமீபத்தில் நடைப்பெற்ற சீன் பட விழாவில் இயக்குநர் ஜித்து மாதவன் உடன் பணியாற்றியது குறித்து பேசியது தற்போது இனையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நான் மனதில் நினைத்த ஆசை தற்போது நிறைவேறியது – நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 13:22 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் மொழியில் இதுவரை 46 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை தமிழ் மொழியில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த சிலப் படங்கள் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது 47-வதாக உருவாகி உள்ளது சீன் படம். இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்று துபாயில் நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் இயக்குநர் ஜித்து மாதவன் உடன் பணியாற்றியது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் மனதில் நினைத்த ஆசை தற்போது நிறைவேறியது:

ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன். அது இப்போது சீன் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பொதுவாக, கதையைக் கேட்கும்போது நான் அமைதியாகவே கவனிப்பேன், ஆனால் இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, ​​முதல் 5 நிமிடங்களிலேயே என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சீன் படத்தின் மூலம் ஜித்து முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்கிறார்.

மாயா என்ற நஸ்ரியாவின் கதாபாத்திரம் மிக முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நஸ்லேனின் முதல் தமிழ்ப் படம். அவர் இன்னும் பல தமிழ்ப் படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல், இசையமைப்பாளர் சுஷின் ஷியாமிற்கும் இது முதல் தமிழ்ப் படம்; அவரது இசை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சீன் படக்குழுவினர் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது, இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது.

28 ஆண்டுகள் மற்றும் 48 திரைப்படங்களுக்குப் பிறகும், இந்த பயணம் எனக்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாகத் தெரிகிறது. கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகியவற்றை நீங்கள் ரசித்தது போலவே, இந்த தீபாவளிக்கு சீன் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

Also Read… கப்பு முக்கியம் பிகிலு… 7 ஆண்டுகளைக் கடந்தது பிகில் படம் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் வேஸ்ட்

Follow Us