தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!
Tiruvannamalai 3 Girl Missing : திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற 3 சிறுமிகள் திடீரென மாயமாகினர். இ து தொடர்பாக தண்டராம்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தில் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சிறுமிகள் காணாமல் போன சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் படித்து வந்த 3 மாணவிகள் நேற்று திங்கள் கிழமை ( அக்டோபர் 26- ஆம் தேதி) பள்ளிக்கு சென்றிருந்தனர். ஆனால், பள்ளி முடிந்து வழக்கம் போல வீடு திரும்ப வேண்டிய 3 மாணவிகளும் குறித்த நேரத்துக்கு வீடு திரும்பவில்லை.
பள்ளி சென்ற 3 சிறுமிகள் மாயம்
இதனால், அச்சமடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடம் கேட்டனர். அவர்கள் ஏற்கனவே பள்ளி முடிந்து சென்று விட்டதாக ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால், மேலும் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்கள் மகள்களை அந்தந்த பகுதிகளில் தேடத் தொடங்கினர். வெகு நேரம் ஆகியும் காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: என்னையா கேலி செய்கிறாய்.. என்ன செய்கிறேன் பார்.. நண்பனை கோடாரியால் பதம் பார்த்த தொழிலாளி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!




தமிழகத்தில் அடுத்தடுத்து காணாமல் போகும் சிறுமிகள்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தனது தாயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி அதிகாலையில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது வரை சிறுமி குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை.
செஞ்சி- மதுரையில் காணாமல் போன சிறுமி- சிறுவன்
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தற்போது வரை எந்தவிதமான வகையிலும் துப்பு துலங்கவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போன நிலையில், மறுநாள் பாழடைந்த வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டிருந்தார். இதுபோன்று அடிக்கடி சிறுவர்கள் காணாமல் போயி வரும் நிலையில் தற்போது திருவண்ணாமலையில் 3 சிறுமிகள் காணாமல் போய் உள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: சேலம் பிரபல ரவுடி கொலை.. திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது எப்படி.. கைதான 7 பேர் பகீர் வாக்குமூலம்!