AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரயில் பயணிகளே இனி இந்த வசதி கட்.. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நோ அனுமதி.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Trains Charging Points Power Supply : தென் மண்டலங்களில் இயக்கப்படும் ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகளில் மின் விநியோகம் இருக்காது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

ரயில் பயணிகளே இனி இந்த வசதி கட்.. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நோ அனுமதி.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
ரயிலில் சார்ஜிங் பாயிண்டுகள் செயல்படாது.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Oct 2026 20:58 PM IST

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், இரவு நேரத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் தனது பவர் பேங்கை சார்ஜிங் பாயின்டில் இணைத்து இருந்தார். அவர், அந்த இணைப்பை வெகு நேரம் உபயோகப்படுத்திய நிலையில் அணைக்காமல் இருந்துள்ளார். இதனால், அவர் சார்ஜ் செய்த பவர் பேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களின் இரவு 11 மணிக்கு மேல் செல்போன் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை சார்ஜ் செய்ய முடியாது எனவும், அதற்கான மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் சார்ஜிங் பாயிண்டுகள் மின் விநியோகம் தடை

தினந்தோறும் இயக்கப்பட்டு வரும் ஏராளமான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப், பவர் பேங்க், இயர் போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை சார்ஜிங் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19- ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யும் திட்டம்.. பின்வாங்கிய தவெக அரசு.. நிர்மல்குமார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்!

பவர் பேங்க் வெடித்து தீ விபத்து

ஆனால், இந்த உத்தரவு மீது துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த உத்தரவை பின்பற்றாத காரணத்தால் அண்மையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் சார்ஜ் செய்த பவர் பேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து கொடும் காயத்தையோ, உயிரிழப்பையோ, பொருள் சேதத்தையோ ஏற்படுத்தவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட உள்ளது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை

அதன்படி, அனைத்து ரயில்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் சார்ஜிங் செய்யும் பாய்ண்டுகள் கட்டாயம் அணைக்கப்பட்டு இருக்கும். இதில், எந்த விதமான விதிவிலக்கும் அளிக்கப்படாது. இந்த நடைமுறையே உறுதி செய்ய சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரயில்வே அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!

Follow Us