சிறைவாசம் அனுபவிக்கும் அன்பில் மகேஷ்.. முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுது!
What Facilities Provided Anbil Mahesh In Puzhal Prison : புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும், என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தின் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு என்னென்ன வசதிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில், அவர் முன்னாள் அமைச்சர், எம்.சி.ஏ. பட்டதாரி என்பதன் அடிப்படையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு வழக்கமான உணவுடன் கூடுதலாக
மேலும் படிக்க: அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது ஏன்.. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம்!
- சப்பாத்தி.
- வாரத்தில் 3 நாட்கள் சிக்கன்.
- சாதாரண கைதிகளை விட அதிக அளவில் பால்.
- தேநீர்.
- தங்குவதற்கு தனி அறை.
- கட்டில்.
- மெத்தை.
- நாற்காலி.
- மின்விசிறி.
- மேஜை.
- தினசரி நாளிதழ்கள்.
- கொசுவலை.
- தொலைக்காட்சி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் வழங்கப்படும்.
கூடுதல் பாதுகாப்புடன் காற்றோட்டமான அறை
- புழல் சிறை கண்காணிப்பாளர் அனுமதியுடன் வெளியில் இருந்து ஹாட் பாக்ஸ், தட்டு ஆகியவை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
- கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் பிரத்தியேக மருத்துவ பரிசோதனைகளும் கிடைக்கும்.
- வழக்கமாக சாதாரண கைதிகளுடன் அடைக்கப்படாமல் காற்றோட்டமான தனி அறை வழங்கப்படும்.
- சொந்த செலவில் உணவு வாங்கிக் கொள்ளலாம்.
- சாதாரண கைதிகளை விட அதிகமான முறை உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு.
சிறை சட்டங்கள்- விதிகளின் படி சிறப்பு வசதிகள்
இந்த வசதிகள் அனைத்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறை சட்டங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் கைதிகளுக்கு அவர்களது கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து, குற்றத்தின் தன்மை மற்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதல் வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இதில், எம். பி.க்கள்., எம்எல்ஏக்கள்., முன்னாள் முதல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், அதிகமான வருமான வரி செலுத்துபவர்கள் உள்ளிட்டோருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்படும்.




அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிறப்பு வசதிகள்
அந்த வகையில் தான், தற்போது ரூ. 100 கோடி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்குறிப்பிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இதுபோன்ற முதல் வகுப்பு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. புழல் சிறையில் அடைப்பு?