ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. இரவில் சிறையில் அடைப்பு?
Anbil Mahesh Poyyamozhi Arrested : தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சென்னையில் செயல்பட்டு வந்த போலி தனியார் பள்ளிகள் சங்கங்களின் தலைவர் பி.டி. அரசகுமார் என்பவர் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடி பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பி.டி. அரசகுமார், முத்துக்குமார் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். இதில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, அவர் தனக்கு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன் ஜாமீன் மறுப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைந்த கரையில் உள்ள குடியிருப்பில் இருந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!




அன்பில் மகேஷ் இடங்களில் அதிரடி சோதனை
முன்னதாக, பிடி அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பில் மகேஷ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் அவர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், பென் டிரைவ், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த சோதனையின் போது, தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையி அடைப்பு?
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி நிதி மோசடி என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன் ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனிடையே, எதிர் தரப்பிலும் அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அன்பில் மகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்த பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். இதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: டெங்குவுக்கு மத்தியில் அச்சுறுத்தும் எலி காய்ச்சல்.. கன்னியாகுமரியில் மின்துறை ஊழியர் பலி.. பீதியில் மக்கள்!